July 29, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

வந்தவாசி, ஜூன் 07: திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி வட்ட எக்ஸ்னோரா கிளை சார்பில் உலக சுற்றுச்சூழல் தின விழா...
வந்தவாசி, ஜூன் 07: திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி தீயணைப்பு மற்றும் மீட்பு துறை சார்பில் ‘வாங்க கற்றுக் கொள்வோம்’...
ரூ 25 ஆயிரம் நிதி உதவி திருச்சி மாவட்டம், மணப்பாறை 15 வது வார்டு சேதுரத்தின புரத்தைச் சேர்ந்த...

தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை சார்பில் தீ பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு:-தேனி. ஜூன்.07-தமிழ்நாடு தீயணைப்பு (மற்றும்) மீட்புப்பணிகள் துறையின் சார்பாக “வாங்க கற்றுக் கொள்வோம்”என்ற பிரத்யேக தலைப்பில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தீ பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு வகுப்புகள் தமிழகம் முழுவதும் உள்ள 384 நிலையங்களில் ஜூன்.6 மற்றும் 7-ம் தேதிகளில் காலை 11:00 மணி முதல் 12:00 வரையும் மாலை 04:00 மணி முதல் 05:00 மணி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்ததை தொடர்ந்து, தீயணைப்பு (மற்றும்) மீட்புப்பணிகள் துறை இயக்குநர் திருமதி.சீமா அகர்வால் அறிவுறுத்தலின்படி சுவாச கருவிகள் லைஃப் ஜாக்கெட் கயிறு பயன் படுத்தி அடுக்குமாடி கட்டிட உயரங்களில் விபத்தின் போது எவ்வாறு பொதுமக்களையும் பொருட்களையும் மீட்பது,அவசரகால மீட்பு முறைகள் மற்றும் முதலுதவி அளித்தல்,மீட்புப் பணிகளுக்காக பயன்படுத்தப்படும் நவீன இயந்திரங்களை பயன்படுத்தும் முறைகள்,தீயணைப்பு உபகரணங்களை எவ்வாறு பயன்படுத்துவது போன்ற செயல்முறை குறித்து,தேனி மாவட்டம் சின்னமனூர் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலைய அலுவலகத்தில் செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது. அப்போது நிலைய அலுவலர் நிலைய அலுவலர் வெங்கட்குமார், சிறப்பு அலுவலர் ராஜா ஆகியோர் தலைமையில் பொதுமக்கள் மற்றும் மாணவ மாணவியர்களுக்கு இயற்கை பேரிடர் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.இது குறித்து நிலைய அலுவலர் கூறும் போது:பொதுமக்களின் அவசரகால பாதுகாப்பு கருதி நடைபெறும் இரண்டு நாள் தீ தடுப்பு பாதுகாப்பு விழிப்புணர்வு வகுப்பில் சின்னமனூரை சுற்றியுள்ள பொதுமக்கள்,மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர் என தெரிவித்தார்.

விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் ஜூன்-07:உலக சுற்றுச்சூழல் தினத்தை சிறப்பிக்கும் வகையில் மக்கள் ஜனாதிபதி APJ அப்துல் கலாமின் வல்லரசு இந்தியா இயக்கம் மற்றும் APJ அப்துல் கலாம் IAS அகாடமி சார்பில் செஞ்சி கோட்டை வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. சிறப்பு வருவாய் ஆய்வாளரும், சமூக சேவகருமான கண்ணன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் செஞ்சி வருவாய் வட்டாட்சியர் கார்த்திகேயன் அவர்கள் கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டு சிறப்பித்தார். இந்நிகழ்ச்சியில் கிராம நிர்வாக அலுவலர்கள் அருள்தாஸ், புகழரசன், தமிழ்நாடு தன்னார்வலர் அமைப்பின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அணியின் ஹரிவாசன் மற்றும் செஞ்சி APJ அப்துல் கலாம் IAS அகாடமியின் மாணவர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

நாள்: 06.09.2026 புதுச்சேரியில் பிரெஞ்சு பாடமொழி நீக்கம்: மாணவர்களின் எதிர்காலத்துடன் விளையாடும் என்.ஆர். காங்கிரஸ் – பாஜக அரசை...
புதுச்சேரி, ஜூன் 6-புதுச்சேரி திராவிடர் கழகம் சார்பில் கலைஞர் கருணாநிதியின் 103வது பிறந்தநாளையொட்டி திராவிடர் எழுச்சி நாள் பொதுக்கூட்டம்...
புதுச்சேரி, ஜூன். 7–திமுகவை எதிர்த்தவர்கள் எல்லாம் இறந்து விட்டனர். ஆனால் திமுக நின்று கொண்டுதான் இருக்கிறது. இந்திய அரசியலின்...
குழந்தைகளுடன் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் திருச்சி மாவட்டம். மணப்பாறையை அடுத்த வீரப்பூர் உலக புகழ்பெற்ற பொன்னர் சங்கர் பெரியகாண்டியம்மன்...