திருப்பூர்: ஜூலை-28
தாராபுரம் நகராட்சி நிரந்தர நகராட்சிஆணையாளரை நியமிக்க வேண்டும் -பேருந்து நிலையம் மேம்படுத்தும் பணி மற்றும் ராஜவாய்காலின் குறுக்கே மூன்று பாலங்கள் கட்டும் பணி – விரைந்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர ஆவணம் செய்ய வேண்டும்!!
தாராபுரம் நகராட்சி பகுதியில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ், ரூ553.00 இலட்சம் மதிப்பீட்டில் புதிய பேருந்து நிலையம் மேம்படுத்தும் பணியானது 95% முடிக்கப்பட்டுள்ளது மீதம் 5% பணிகள் மட்டுமே முடிக்கப்படாமல் உள்ளது. இப்பணியினை விரைந்து பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட வேண்டும். இப்பணிகளில் காலதாமதம் ஏற்படுவதால் வணிகர்கள், பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். இப்பணியானது நகராட்சிக்கு வருவாய் ஈட்டும் முக்கிய பணியாக இது உள்ளது.
மீதமுள்ள 5% பணிகள் மூன்று மாதங்களாக இழுத்தடிக்கப்பட்டு வருகிறது. இதனால் நகராட்சிக்கு நிதி இழப்பு ஏற்பட்டு வருகிறது.
பற்றாக்குறை நிதி இயக்கம் மற்றும் பராமரிப்பு நிதியின் கீழ் தாரபுரம் நீர்வளத்துறையின் வாய்காலின் (ராஜவாய்கால்) குறுக்கு மிக முக்கியமான நகர் பகுதியினை இரண்டாக பிரிக்கும் பாலத்தினை இடித்து புதிய பாலங்கள் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இப்பணியானது மிகவும் தொய்வாக நடைபெற்று வருகிறது. இதனால் பொதுமக்கள் அவசர காலங்களில் மருத்துவமணை, மருத்தகம். பேருந்து நிலையம் பள்ளி கல்லூரிகளுக்கு சென்று வர சிரமப்பட்டு வருகின்றனர். மேலும், பழைய காவல் நிலைய வீதியின் அமைந்துள்ள பாலம் கட்டும் பணியானது இன்றனவும் துவங்கப்படாமல் உள்ளது.
எதிர்வரும் காலங்களில் பாசனத்திற்காக வாய்காலின் தண்ணீர் திறக்கப்பட்டால் பணி மேற்கொள்ள இயலாது.
என மாவட்ட ஆட்சியாளரிடம்
கோரிக்கை மனுவினை தாராபுரம் நகராட்சி தலைவர் பாபு கண்ணன்
திராவிட முன்னேற்றக் கழகத்தின் 25வார்டு உறுப்பினர்களும் ஒன்றாக சேர்ந்து மனு அளித்தனர்..

More Stories
கலைஞர் முத்தமிழ் சங்கம் சார்பில் முப்பெரும் விழா..!
அப்துல் கலாம் நினைவு நாள் திருப்பூர் நுகர்வோர் நல முன்னேற்ற சங்கம் சார்பில் அனுசரிப்பு.
மறைந்த என்.ஆர். காங்கிரஸ் மூத்த தலைவர் மாரிமுத்து பிறந்தநாள்: மலரஞ்சலி, அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கல்