மறைந்த என்.ஆர். காங்கிரஸ் மூத்த தலைவர் மாரிமுத்துவின் பிறந்தநாளை முன்னிட்டு, மேட்டுப்பாளையம் நான்கு முனை சந்திப்பில் அவரது திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு என்.ஆர். காங்கிரஸ் பிரமுகரும், மாரிமுத்துவின் மகனுமான பூவரசன் தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் பங்கேற்றோர் அனைவரும் மாரிமுத்துவின் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

தொடர்ந்து, பொதுமக்களுக்கு அறுசுவை உணவு வழங்கப்பட்டதுடன், பல்வேறு நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டன.
இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக சட்டமன்ற உறுப்பினர்கள் ஏ.கே.டி. ஆறுமுகம், அழகானந்தம், செந்தில், என்.ஆர். காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயபால் உள்ளிட்டோர் கலந்து கொண்டு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
மேலும், என்.ஆர். காங்கிரஸ் கட்சியின் மாநில, மாவட்ட மற்றும் தொகுதி நிர்வாகிகள், கட்சி நிர்வாகிகள் மற்றும் ஏராளமான தொண்டர்கள் நிகழ்ச்சியில் பங்கேற்று அஞ்சலி செலுத்தினர்.

More Stories
மக்களை ஏமாற்றும் மகத்தான பட்ஜெட்டில்புதுச்சேரி வளர்ச்சிக்கான நிதி எங்கே.?.முதல்வர் ரங்கசாமிக்குஆர்.எல். வெங்கட்ராமன் கேள்வி.?.
கோவையில் மாற்றுத்திறனாளிகளுக்கான கடன் மேளா
வந்தவாசி அரசு மருத்துவமனையில் நோயாளிகள் நல சங்க கூட்டம்..!