கள்ளக்குறிச்சி ஜீன் 07
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறை மற்றும்
விளையாட்டு மேம்பாட்டுத் துறையின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைகள் மற்றும்
விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜூனா இன்று
(07.06.2026) ஆய்வு மேற்கொள்ள உள்ளார்கள்.
இதன்படி பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைகள் மற்றும் விளையாட்டு
மேம்பாட்டுத் துறை அமைச்சர் இன்று (07.06.2026) காலை 08.00 09.30 மணி
வரை வீரசோழபுரம் கிழக்கு கிராமத்தில் விளையாட்டு மேம்பாட்டுத் துறையின் சார்பில் புதிதாக அமைக்கப்பட்டு வரும் மாவட்ட விளையாட்டரங்கப் பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்ய உள்ளார்கள்.
அதனைத் தொடர்ந்து, கல்வராயன்மலை ஊராட்சி ஒன்றிய அலுவலகக் கூட்டரங்கில் காலை 11.00 – 01.30 மணி வரை கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பொதுப்பணித்துறை மற்றும்
நெடுஞ்சாலைத் துறையின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து துறை சார்ந்த அலுவலர்களுடன் விரிவாக ஆய்வு மேற்கொள்ள உள்ளார்கள்.
பின்னர், பிற்பகல் 02.00 – 03.00 மணி வரை கல்வராயன்மலை பழங்குடியின
கிராமங்களை பார்வையிட்டு பொதுமக்களை சந்திக்க உள்ளார். அதனைத் தொடர்ந்து மாலை 03.00 – 05.00 மணி வரை நெடுஞ்சாலைத்துறையின் சார்பில் வெள்ளிமலை முதல்
சின்னத்திருப்பதி வரை புதிதாக அமைக்கப்பட்டு வரும் சாலைப் பணியையும், வெள்ளிமலையில் பொதுப்பணித்துறையின் சார்பில் புதிதாகக் கட்டப்பட்டு வரும் ஆய்வு
மாளிகைக் கட்டடக் கட்டுமானப் பணியையும் பார்வையிட்டு ஆய்வு செய்ய உள்ளார்கள்.
தொடர்ந்து கள்ளக்குறிச்சியில் பொதுப்பணித்துறையின் சார்பில் புதிதாகக் கட்டப்பட்டு வரும் மாவட்ட மைய நூலகம் மற்றும் மாவட்ட நூலக அலுவலகக் கட்டடக் கட்டுமானப் பணியையும், பின்னர் நெடுஞ்சாலைத் துறையின் சார்பில் புதிதாக
அமைக்கப்பட்டு வரும் திருக்கோவிலூர் – ஆசனூர் சாலைப் பணியையும் பார்வையிட்டு ஆய்வு செய்ய உள்ளார்கள்.
இந்த ஆய்வின் போது பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறை அரசு உயர்
அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொள்ள உள்ளார்கள் என மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெ.இ.பத்மஜா தெரிவித்துள்ளார்.

More Stories
காவேரிப்பட்டினம் ஒன்றிய அவைத்தலைவர் இராமமூர்த்தி மனைவியின் துக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தே.மதியழகன்
புதுச்சேரி ஆல்பா கல்லூரி மற்றும் அனுலர் டெக்னாலஜிஸ் இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க புரிந்துணர்வு ஒப்பந்தம்!
மணப்பாறையில்