தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை சார்பில் தீ பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு:-தேனி. ஜூன்.07-தமிழ்நாடு தீயணைப்பு (மற்றும்) மீட்புப்பணிகள் துறையின் சார்பாக “வாங்க கற்றுக் கொள்வோம்”என்ற பிரத்யேக தலைப்பில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தீ பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு வகுப்புகள் தமிழகம் முழுவதும் உள்ள 384 நிலையங்களில் ஜூன்.6 மற்றும் 7-ம் தேதிகளில் காலை 11:00 மணி முதல் 12:00 வரையும் மாலை 04:00 மணி முதல் 05:00 மணி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்ததை தொடர்ந்து, தீயணைப்பு (மற்றும்) மீட்புப்பணிகள் துறை இயக்குநர் திருமதி.சீமா அகர்வால் அறிவுறுத்தலின்படி சுவாச கருவிகள் லைஃப் ஜாக்கெட் கயிறு பயன் படுத்தி அடுக்குமாடி கட்டிட உயரங்களில் விபத்தின் போது எவ்வாறு பொதுமக்களையும் பொருட்களையும் மீட்பது,அவசரகால மீட்பு முறைகள் மற்றும் முதலுதவி அளித்தல்,மீட்புப் பணிகளுக்காக பயன்படுத்தப்படும் நவீன இயந்திரங்களை பயன்படுத்தும் முறைகள்,தீயணைப்பு உபகரணங்களை எவ்வாறு பயன்படுத்துவது போன்ற செயல்முறை குறித்து,தேனி மாவட்டம் சின்னமனூர் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலைய அலுவலகத்தில் செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது. அப்போது நிலைய அலுவலர் நிலைய அலுவலர் வெங்கட்குமார், சிறப்பு அலுவலர் ராஜா ஆகியோர் தலைமையில் பொதுமக்கள் மற்றும் மாணவ மாணவியர்களுக்கு இயற்கை பேரிடர் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.இது குறித்து நிலைய அலுவலர் கூறும் போது:பொதுமக்களின் அவசரகால பாதுகாப்பு கருதி நடைபெறும் இரண்டு நாள் தீ தடுப்பு பாதுகாப்பு விழிப்புணர்வு வகுப்பில் சின்னமனூரை சுற்றியுள்ள பொதுமக்கள்,மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர் என தெரிவித்தார்.

More Stories
காவேரிப்பட்டினம் ஒன்றிய அவைத்தலைவர் இராமமூர்த்தி மனைவியின் துக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தே.மதியழகன்
புதுச்சேரி ஆல்பா கல்லூரி மற்றும் அனுலர் டெக்னாலஜிஸ் இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க புரிந்துணர்வு ஒப்பந்தம்!
மணப்பாறையில்