வந்தவாசி, ஜூன் 07:
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி தீயணைப்பு மற்றும் மீட்பு துறை சார்பில் ‘வாங்க கற்றுக் கொள்வோம்’ என்ற தலைப்பில் தீவிபத்தை தடுக்கும் வழிமுறைகள் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி செயல் அலுவலர் மு.பிரபாகரன் தலைமையில் அலுவலக வளாகத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் ரெட் சங்க செயலாளர் பா.சீனிவாசன், ஓய்வுபெற்ற சார் ஆட்சியர் சங்கரன் உள்ளிட்ட ஊர்ப் பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் பலரும் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியில் தீவிபத்தை தவிர்க்கும் வழிமுறைகள் விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்கள் வழங்கப்பட்டது. மேலும் தீயணைப்புத் துறை சார்பில் பயன்படுத்தப்படும் மீட்பு பொருட்கள் கண்காட்சியாக வைக்கப்பட்டது. இதை ஏராளமானோர் பார்வையிட்டனர். இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியை நேற்றும், இன்றும் நடத்திட தமிழ்நாடு தீயணைப்புத் துறை வலியுறுத்தியுள்ளது.

More Stories
கலைஞர் முத்தமிழ் சங்கம் சார்பில் முப்பெரும் விழா..!
அப்துல் கலாம் நினைவு நாள் திருப்பூர் நுகர்வோர் நல முன்னேற்ற சங்கம் சார்பில் அனுசரிப்பு.
மறைந்த என்.ஆர். காங்கிரஸ் மூத்த தலைவர் மாரிமுத்து பிறந்தநாள்: மலரஞ்சலி, அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கல்