அமித் ஷா ஜி ரோட்ஷே19 ம் தேதி நடக்கிறது..
பாஜக மாநில தலைவர் நைனார் நாகேந்திரன் ஈரோட்டில் செய்தியாளர்கள் சந்திப்பில் தகவல்..
ஈரோடு. ஏப்ரல். 19
தமிழகத்தில் தாமரை மலர்வது உறுதி. அதேபோல் மொடக்குறிச்சி தொகுதியில் தாமரை வெல்வது நிச்சயம் உறுதி. என்று பாஜக மாநில தலைவர் நைனார் நாகேந்திரன் தெரிவித்தார்.
தமிழக சட்டமன்ற பொதுத் தேர்தல் வருகின்ற ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெற இருக்கின்றது. இந்த நிலையில் தமிழக தேர்தல் களம் மிகவும் பரபரப்பாக உள்ளது.
இந்த சூழ்நிலையில் தமிழக பாஜக தலைவர் நைனார் நாகேந்திரன் நேற்று ஈரோடு வந்திருந்தார். அப்போது அவர் செய்தியாளர்கள் சந்தித்தார்.
அப்போது அவர் செய்தியாளர்கள் மத்தியில் பேசியதாவது..
நடைபெற இருக்கின்ற சட்டமன்ற பொது தேர்தலில் தேசிய ஜனநாயக முற்போக்கு கூட்டணி மிகவும் வலுவாக உள்ளது. அதிமுக பாஜக தலைமையிலான கூட்டணி நிச்சயம் அதிக இடங்களில் வெற்றி பெறும். தமிழகத்தில் ஆட்சி மாற்றம் என்பது உறுதியான ஒன்று.
அதே நேரம் ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி சட்டமன்ற தொகுதியில் பாஜக வேட்பாளராக போட்டியிலும் கிருத்திகா ஹரிவித்திறன் கொண்ட நல்ல பண்பாளர். நல்ல படித்த நாட்டு நடப்பை நன்கு தெரிந்த ஒரு வேட்பாளர்.
மொடக்குறிச்சி தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் சகோதரி கிருத்திகா வெற்றி பெறுவது உறுதி.
அதே நேரம் வேட்பாளருக்கு வருகின்ற 19ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை நம்முடைய மாண்புமிகு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஜி சிவகிரி மற்றும் மொடக்குறிச்சி பகுதியில் ரோட்ஷே நடத்த உள்ளார். அதில் பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொள்ள உள்ளனர்.
இதன் மூலம் மொடக்குறிச்சி தொகுதியில் பிஜேபி வேட்பாளர் கிருத்திகா வெற்றி பெறுவது நிச்சயம் என்று உறுதியாகிவிடும்.
மத்திய அரசின் எந்தத் திட்டத்திற்கும் முதல்வர் மு க ஸ்டாலின் முட்டுக்கட்டை போட்டு வருகிறார். விரைவில் அவரது ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும்.
இவ்வாறு பாஜக மாநில தலைவர் நைனா நாகேந்திரன் ஈரோட்டில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பின்போது தெரிவித்தார்.

More Stories
ஏழை மக்கள் கழகம் நிறுவனர் தலைவரை தேசிய உழைப்பாளர் முன்னேற்ற கழக நிறுவனர் தலைவர் நேறில் சந்திப்பு!
பத்திரிகைச் செய்தி04.06.2026
முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி பிறந்த நாளை முன்னிட்டு தேனி மாவட்டம் குச்சனூர் பேரூராட்சியில் சேர்மன் ரவிச்சந்திரன் தலைமையில் பொதுமக்களுக்கு இனிப்புகள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது .உடன் திமுக நிர்வாகிகள் உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டனர்.