சென்னை:
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வணிகர் அணி மாநில துணைச் செயலாளராக கே. எம். கோபி நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான அறிவிப்பை கட்சியின் தலைவர் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளார்.
கட்சியின் வளர்ச்சி, அமைப்புப் பணிகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் இந்த நியமனம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நீண்ட காலமாக கட்சியின் கொள்கைகளை மக்களிடம் கொண்டு சேர்ப்பதிலும், பல்வேறு மக்கள் நலப் போராட்டங்கள் மற்றும் சமூகப் பணிகளில் தீவிரமாக செயல்பட்டு வந்த கே. எம். கோபியின் சேவையை பாராட்டும் வகையில் இந்த பொறுப்பு வழங்கப்பட்டுள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
வணிகர் அணி மாநில துணைச் செயலாளராக பொறுப்பேற்றுள்ள கே. எம். கோபி, கட்சித் தலைவர் மற்றும் நிர்வாகத்தின் வழிகாட்டுதலின்படி மாநிலம் முழுவதும் அமைப்புப் பணிகளை விரிவுபடுத்தவும், புதிய உறுப்பினர்களை இணைக்கும் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தவும், கட்சியின் கொள்கைகளை பொதுமக்களிடம் கொண்டு செல்லவும் முழு அர்ப்பணிப்புடன் செயல்படுவேன் என்று தெரிவித்துள்ளார்.
இந்த நியமனத்தைத் தொடர்ந்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பல்வேறு சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள் கே. எம். கோபிக்கு வாழ்த்து தெரிவித்து, புதிய பொறுப்பில் சிறப்பாக செயல்பட வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.
செய்தியாளர் முபாரக்

More Stories
திருச்சியில்
நான் ராஜினாமா செய்ய தயார் :
ஜனநாயகத்தைக் காப்போம் புதுச்சேரியில் நடைபெற்ற ‘இரட்டை சத்தியாக்கிரகம்’ மக்கள் போராட்டம்