June 6, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

புதுவை தமிழ்ச் சங்கத்தில் மாபெரும் இலவச மருத்துவ முகாம்: 500-க்கும் மேற்பட்ட இசைக்கலைஞர்கள் பங்கேற்பு

புதுச்சேரி:

இசைக் கலைஞர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்கள் சங்கம் மற்றும் பிம்ஸ் (PIMS) மருத்துவமனை இணைந்து புதுவை தமிழ்ச் சங்கத்தில் மாபெரும் இலவச மருத்துவ முகாமை நடத்தின.

இந்த முகாமில் சிறப்பு விருந்தினராக முத்துலட்சுமி சரவணன் கலந்துகொண்டார். தமிழ்ச்சங்கத் தலைவர் V. முத்து, பிம்ஸ் மருத்துவமனை மக்கள் தொடர்பு அதிகாரி கிருஷ்ணமூர்த்தி, கலைமாமணி டாடா பானுமதி, டாக்டர் பிரமிளா தமிழ்வாணன் மற்றும் கவிக்குயில் மியூசிக் அகாடமி சுசீந்திரகுமார் ஆகியோர் முன்னிலையில் முகாம் சிறப்பாக நடைபெற்றது.

இம்முகாமில் புதுச்சேரி, கடலூர், காரைக்கால், விழுப்புரம் மற்றும் மரக்காணம் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட இசைக்கலைஞர்கள் தங்கள் குடும்பத்தினருடன் கலந்துகொண்டு மருத்துவப் பரிசோதனைகளைச் செய்துகொண்டனர்.

இதற்கான ஏற்பாடுகளை இசைக்கலைஞர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்கள் நலச் சங்கத் தலைவர் முரளிதரன், செயலாளர் சரவணன், பொருளாளர் நெடுஞ்செழியன் மற்றும் சங்கத்தின் முக்கியப் பொறுப்பாளர்கள் இணைந்து செய்திருந்தனர்.