அகில இந்திய மக்கள் மறுமலர்ச்சி கழகம் ஆர்ப்பாட்டம் :
திருச்சி ஜூலை13-
அகில இந்திய மக்கள் மறுமலர்ச்சி கழகம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சி கலெக்டர் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு நிறுவனத் தலைவர் வழக்கறிஞர் பொன் முருகேசன் தலைமை தாங்கினார். திருச்சி மாநகர் மாவட்ட தலைவர் குமார், புறநகர் மாவட்ட செயலாளர் செல்வம், புறநகர் மாவட்ட தலைவர் மாரிமுத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் பசும்பொன் மக்கள் முன்னேற்றக் கழகம் தலைவர் அல்லூர். சீனிவாசன், தலித் இயக்கங்களின் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் மெலட்டூர் கார்த்திக் ஆகியோர் கண்டன உரை ஆற்றினார்கள். ஆர்ப்பாட்டத்தில் தேர்தல் அறிக்கையில் கூறிய விவசாய கடன்கள் முழுவதையும்
தவெக அரசு தள்ளுபடி செய்ய வேண்டும். தமிழகத்தில் சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்து படுகொலை செய்த கொலைகாரர்களுக்கு தூக்கு தண்டனை பெற்றுக் கொடுக்க தமிழக அரசு துரித நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகம் முழுவதும் பட்டியல் சமூக மக்கள் மீது கொலை ஏறி தாக்குதல் நடத்தியும், கொலை செய்து அச்சுறுத்தி வருகின்ற ஜாதி வெறியர்களையும், ரவுடிகளையும், இரும்பு கரம் கொண்டு அடக்க வேண்டும்.
20 யூனிட் இலவசம் மின்சார வழங்கப்படும் என்ற தேர்தல் வாக்குறுதியை தவெக அரசு நிறைவேற்ற வேண்டும்.திருச்சி பால்பண்ணை,சிந்தாமணி பகுதியில் உள்ள மனமகிழ் மன்றத்தை மூட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்பாட்டம் நடத்தினார்கள்.ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

More Stories
சேலம்,25/06/2026.
அரிசியில்… அரசியல்…
தமிழக அரசை கண்டித்து திருச்சியில் நாளை ஒருங்கிணைந்த மாவட்ட அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் முன்னாள் அமைச்சர் ஆர்.காமராஜ் தலைமையில் நடக்கிறது. ஆர்ப்பாட்டம் நடைபெறும் இடத்தை மாவட்ட அதிமுக செயலாளர்கள்கார்த்திகேயன், ஆர்.மனோகரன், டி.என்.சிவக்குமார் ஆகியோர் பார்வையிட்ட போது எடுத்த படம். அருகில் அமைப்புச் செயலாளர் டி.ரத்தினவேல்,ஜெயலலிதா பேரவை மாநில துணைச் செயலாளர்கள் அரவிந்தன், டி.ஆர்.சுரேஷ்குமார் மற்றும் நிர்வாகிகள் உள்ளனர்.