திருச்சி மாவட்டம் மணப்பாறை சட்டமன்றத் தொகுதியில், திமுக கூட்டணியைச் சேர்ந்த மனிதநேய மக்கள் கட்சி வேட்பாளர் ப அப்துல் சமதுவை ஆதரித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
மணப்பாறை நகராட்சிக்குட்பட்ட 27 வார்டுகளில் பிரச்சாரத்தைத் தொடங்கிய அமைச்சர், அன்பில் மகேஸ் பொய்யாமொழி பொத்தமேட்டுப்பட்டியில் உள்ள புனித அன்னை பாத்திமா மாதா ஆலயத்தில் மெழுகுவர்த்தி ஏற்றி பிரார்த்தனை செய்தார்.
அதனைத் தொடர்ந்து, அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஜல்லிக்கட்டு காளைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திவிட்டு, திறந்த வாகனத்தில் தனது பிரச்சாரத்தை முறைப்படி தொடங்கினார்.
இந்த பிரச்சாரத்தில் நாடாளுமன்ற உறுப்பினர், கவிஞர் சல்மா மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் திரளாகக் கலந்து கொண்டனர். ட்ரம்ஸ் முழங்க வீதி வீதியாகச் சென்ற அமைச்சர், உதயசூரியன் சின்னத்திற்கு ஆதரவு திரட்டினார்.
முதலமைச்சரின் திட்டங்களும் அமைச்சரின் உரையும் பிரச்சாரத்தின் போது பொதுமக்களிடையே பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்ததாவது







காலை உணவுத் திட்டம்: “எனது இதயத்திற்கு மிகவும் நெருக்கமான திட்டம் காலை உணவுத் திட்டம். முந்தைய முதலமைச்சர்கள் மதிய உணவுத் திட்டத்தோடு நிறுத்திக் கொண்டனர். ஆனால், உழைக்கும் தாய்மார்களின் சிரமத்தையும், மாணவர்களின் தேவையையும் உணர்ந்து முதலமைச்சர் இத்திட்டத்தைக் கொண்டு வந்தார். தற்போது 20 லட்சம் மாணவர்கள் இதன் மூலம் பயனடைந்து வருகின்றனர். விரைவில் இது 8-ஆம் வகுப்பு வரை விரிவுபடுத்தப்பட உள்ளது.”
எதிர்க்கட்சித் தலைவருக்கு கண்டனம்:
“மக்களுக்கான எண்ணற்ற திட்டங்களைச் செயல்படுத்தி வரும் முதலமைச்சரையும், துணை முதலமைச்சரையும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி மிகவும் அநாகரிகமான முறையில் விமர்சித்து வருகிறார். பதவி வெறியின் உச்சத்தில் அவர் பேசும் வார்த்தைகளை மக்கள் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.”
அனைவருக்குமான அரசு: “வாக்களித்தவர்கள், வாக்களிக்காதவர்கள் என பாகுபாடு இன்றி, அனைவரையும் பாதுகாக்கக்கூடிய அரணாகத் திகழ்வதுதான் திமுக அரசு. அனைவரையும் ஒருங்கிணைத்துச் செல்லும் ஒரு முதலமைச்சரை நாம் பெற்றுள்ளோம்.” மேலும் தமிழ் நாட்டில் 5 ஆண்டுகளில் பல்வேறு வளர்ச்சி திட்டங்களை தந்து தற்போது தமிழ் நாடு தலைநிமிர்ந்துள்ளது என்று பேசினார்.
மணப்பாறை நகராட்சியின் 27 வார்டுகளிலும் அமைச்சர் மற்றும் கூட்டணி கட்சியினர் இன்று உதயசூரியன் சின்னத்திற்கு தீவிரமாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

More Stories
பொருளாதார மந்தநிலையால் 10 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு
ஊத்தங்கரை தொகுதி மத்தூர் ஊராட்சியில் is தவெக எம்.எல்.ஏ இளையராஜா நன்றிப் பயணம்: பொதுமக்களிடம் குறைகளைக் கேட்டு அறிந்து தீர்வு காண உறுதி!
புதுச்சேரி அரசியல் நிலவரம் குறித்தும் நடைபெற இருக்கின்ற தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தல் பற்றியும் மாண்புமிகு தமிழக அமைச்சரும்தமிழக வெற்றிக்கழக பொதுச் செயலாளருமான புஸ்ஸி ஆனந்த் அவர்களை….நேயம் மக்கள் கழகதலைவர் G.நேரு(எ)குப்புசாமி MLA அவர்களும்தமிழக வெற்றி கழக புதுச்சேரி பொறுப்பாளர்களானசுவாமிநாதன் ex MLA அவர்கள்,ஆசானா ex MLA அவர்கள்,தனவேல் ex MLA அவர்கள் சந்தித்து ஆலோசனை மேற்கொண்டனர்.