June 13, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

ஸ்டாலின் ஆண்டது போதும் மக்கள் மாண்டது போதும் மாற்றம் ஏற்பட வேண்டும்…

ஈரோடு_ மொடக்குறிச்சி பிரச்சாரத்தில் அண்ணாமலை பேச்சு…

ஈரோடு. ஏப்ரல். 15

திமுக ஆண்டது போதும் மக்கள் மாண்டது போதும் தமிழகத்தில் மாற்றம் வேண்டும் என்று ஈரோடு மற்றும் மொடக்குறிச்சி தேர்தல் பிரச்சாரத்தில் பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை பேசினார்.

ஈரோடு மேற்கு சட்டமன்ற தொகுதியில் தாமரை சின்னத்தில் போட்டியிடும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி வேட்பாளர் பி. யுவராஜ் மற்றும் மொடக்குறிச்சி தொகுதி பாஜக வேட்பாளர் கிருத்திகா ஆகியோரை ஆதரித்து நேற்று முன்தினம் இரவு ஈரோடு வில்லரசம்பட்டி மற்றும் மொடக்குறிச்சி பகுதிகளில் பாஜகவின் முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்து பேசினார்.

அப்போது அவர் பேசியதாவது…

இன்றைக்கு தமிழகத்தில் நடைபெற்று வரும் ஊழல் திமுக ஆட்சியை அகற்ற வேண்டும். காரணம் கடந்த ஐந்து ஆண்டு காலமாக ஊழல் புரையோடிய ஆட்சியை நடத்தி வரும் ஸ்டாலின் மற்றும் அவர்களின் குடும்ப ஆட்சியில் எல்லா துறைகளிலும் ஊழல் மலிந்து விட்டது.

அதேபோல் மணல் கொள்ளை, கல்குவாரி மோசடி என்று இயற்கை வளங்களையும் சுரண்டி விற்று பல்லாயிரம் கோடி சம்பாதித்து விட்டனர்.

எத்தனையோ குறைகளும் குற்றங்களும் நிறைந்த ஆட்சியாக இருந்த போதும் நாங்கள் யோகியதர்கள் என்று கூறி மூன்று பொம்மைகளை போல் ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின், கனிமொழி மூன்று பேரும் பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து வாக்காளர் பெருமக்களை ஏமாற்ற பார்க்கிறார்கள்.

எனது அருமை சொந்தங்களே கூடியிருக்கும் தாய்மார்களே, திமுக ஆட்சியில் எங்கு பார்த்தாலும் போதை கலாச்சாரங்கள் நிறைந்து விட்டது. கள்ள சந்தையில் மது கஞ்சா, உயர்தர போதை பொருள் என தமிழக முழுவதும் ஒரு போதை பொருட்களின் குடோனாக மாறிவிட்டது.

விவசாயத்தைப் பற்றி வாய் கிழிய பேசும் ஸ்டாலினுக்கு விவசாயத்தைப் பற்றி என்ன தெரியும் விவசாய பெருமக்களே. மொடக்குறிச்சி தொகுதி விவசாயிகள் நிறைந்த பகுதி. ஒரு விஷயத்தை நீங்கள் தெரிந்து கொள்ளுங்கள். ஒரு கறவை மாட்டை ஸ்டாலின் வீட்டு முன்பு கட்டினால், அந்த மாட்டை இரண்டு முறை சுற்றி வந்து பால் காமெடி இருந்து வருகிறதா இல்லை கொம்பில் இருந்து வருகிறதா என்று கேள்வி கேட்பார். அவ்வளவுதான் அவருக்கு விவசாயத்தின் அறிவு.

தமிழகத்திற்கு மத்திய அரசு எத்தனையோ பல திட்டங்களை கொண்டு வந்துள்ளது. நம்முடைய பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களும், உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்களும் தமிழக மக்கள் மீது அக்கரை வைத்து எத்தனையோ திட்டங்களை கொண்டு வந்துள்ளார்கள்.

இந்த மொடக்குறிச்சி தொகுதியில் நம்முடைய வேட்பாளராக இங்கு போட்டியிடும் தற்போதைய எம்எல்ஏ சரஸ்வதி அம்மா அவர்களின் மருமகள் கிருத்திகா அவர்கள். அவர் ஒரு சிறந்த படிப்பாளி, ஒரு சிறந்த அறிவும் திறமையும் கொண்ட ஈழம் வேட்பாளர் கிருத்திகா.

இந்த ஈரோடு மாவட்டத்திற்கு பல்வேறு திட்டங்களை அதிமுக ஆட்சி காலத்தில் அன்றைய முதல்வர் அண்ணன் எடப்பாடி பழனிசாமி கொண்டு வந்துள்ளார். அத்திக்கடவு அவிநாசி முத்தம் கொண்டு வந்து கொங்கு மண்டல த்தில் விவசாயம் செழிக்க திட்டங்களை தீட்டி உள்ளார்.

ஆனால் அடுத்து தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நம்முடைய தேசிய முற்போக்கு கூட்டணி அரசு அமைய வேண்டும்.

இன்றைய தினம் தேர்தல் ஆணையம் தலைமைச் செயலாளர் மாற்றி உள்ளது, தமிழக டிஜிபி யை மாற்றி உள்ளது, அதேபோல் தமிழக வாக்காளர் பெருமக்களும் கேடுகெட்ட திமுக ஆட்சியை மாற்ற வேண்டும்.

இந்த விடியா ஊழல் திமுக ஆட்சியில் ஸ்டாலின் ஆண்டது போதும், மக்கள் மாண்டது போதும், தமிழகத்தில் ஒரு மாற்றம் வேண்டும்.

அதற்கு இந்த தொகுதியில் போட்டிடும் பாஜக வேட்பாளர்கள் கிருத்திகாவுக்கு எனது அன்பு சொந்தங்களே நீங்கள் அனைவரும் தாமரை சின்னத்தில் வாக்களிக்க வேண்டும்.

இங்க பாரு பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை பேசினார்.

முன்னதாக அவர் ஈரோடு மேற்கு தொகுதிக்கு உட்பட்ட வில்லரசம்பட்டியில் தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர் யுவராஜை ஆதரித்து பேசினார்.