July 30, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

மாவட்டச் செய்திகள்

கோவிலில் சீட்டு போடும் பணிக்காக வேலை வாங்கி தருவதாக கூறி. 425000 மோசடி செய்த அறங்காவலர் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை. வடமதுரை மே14 திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே திண்டுக்கல் திருச்சி சாலையில் வாகன ஓட்டிகளுக்கு சிம்ம சொற்பனமாக அமைந்திருக்கும் வண்டி கருப்பண்ண சாமி கோவிலில் சீட்டு போடும் வேலை வாங்கி தருவதாக கூறி அறங்காவலர் ரங்கநாதன் என்பவர் அய்யலூர் மணியக்காரன்பட்டி பகுதியைச் சேர்ந்த உஷாராணி என்ற பெண்ணிடம் ரூபாய் 4,25,000 பணம் வாங்கிக் கொண்டு இன்றும் நாளையும் ஏமாற்றிக் கொண்டிருப்பதாக கோவில் அருகே நின்று அந்த குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் கோஷங்களில் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர் இது குறித்து வடமதுரை காவல் நிலையத்தில் புகார் அளித்தும் புகார் அடிப்படையில் போலீசார் கடந்த சில மாதங்களாக சம்பந்தப்பட்ட அறங்காவலர் வசம் வட்டிக்காசு போல் உங்களுக்கு வாங்கி கொடுத்து சமாதானம் கூறி அனுப்பி வைத்தனர் அறங்காவலர் இதுபோன்று வேறு யாரையும் ஏமாற்றி உள்ளாரா அல்லது இவர் மட்டுமே ஏமாற்றப்பட்டுள்ளார் என்பது குறித்து இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சம்பந்தப்பட்ட நபரிடம் விசாரணை நடத்தி உங்களுக்கு வரவேண்டிய தொகையை பெற்று தர வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர். பணம் பெற்றுக் கொண்டு வேலை வாங்கி தருவதாக கூறி புகார் அளித்தும் வடமதுரை போலீசார் சம்பந்தப்பட்ட நபருக்கு ஆதரவளிப்பதாகவும் குற்றம் சாட்டினர்.

காவல் நிலையத்தில் காதல் ஜோடி தஞ்சம். திண்டுக்கல் மே 14 திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே உள்ள அய்யலூர் கலர் பட்டி பகுதியைச் சேர்ந்த ஹரிபிரசாத் வயது 30 இவர் தனியார் பால் கம்பெனியில் ஊழியராக பணியாற்றி வருகிறார் இந்நிலையில் வடமதுரை தென்னம்பட்டி பகுதியைச் சேர்ந்த சோபியா வயது 21 என்ற பெண்ணை கடந்த ஒரு ஆண்டு காலமாக காதலித்து வந்துள்ளார் பெண் கேட்டு தர மறுத்ததாக தெரியவந்தது இருவரும் காதலித்து வந்த நிலையில் வீட்டை விட்டு வெளியேறி அய்யலூரில் உள்ள கோவிலில் திருமணம் செய்து கொண்டனர் பின்னர் பெண் வீட்டார் பிரச்சினை செய்வார்கள் என கருதி வடமதுரை காவல் நிலையத்தில் காதலர்கள் மனக்கோளத்தில் தஞ்சம் அடைந்தனர் வடமதுரை போலீசார் இருதரப்பையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி இருவரும் மேஜர் என்பதால் அவர்கள் விருப்பப்படி வாழ அறிவுரை கூறி யாரும் அவர்களை தொந்தரவு செய்யக்கூடாது என மணமகன் வீட்டாருடன் அனுப்பி வைத்தனர். இதனால் சிறிது நேரம் காவல் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

கோவை- மே:13 பொதுமக்கள் நலன் கருதி வழிபாட்டுத்தலங்கள்,கல்வி நிறுவனங்கள் மற்றும் பேருந்து நிலையங்கள் அருகிலிருந்து 500 மீட்டர் வரை...
திருப்பூர்:மே-13திருப்பூர்-மாவட்டத்தில் உள்ள232 பள்ளிகளில் உள்ள 1412 பள்ளி பேருந்துகள், பள்ளி வேன்கள் உள்ளமுதலுதவி பெட்டி, தீயணைப்பான் கருவி, அவசரகால...
செய்தி அறிக்கை நீட் தேர்வு வினாத்தாள் வெளியான விவகாரத்திற்கு ஒன்றிய பாஜக அரசு முழு பொறுப்பேற்று, நீட் தேர்வை...
சேலத்தில் குடிபோதை தகராறில் வாலிபரை கத்தியால் சரமாரி வெட்டிக்கொன்ற 3 சிறுவர்கள். சேலத்தில் குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் 19...