June 13, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

அரசு மருத்துவமனையில் செவிலியர் தினவிழா..!

வந்தவாசி, மே 13:

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அரசு மருத்துவமனையில் செவிலியர் தினம் கொண்டாடப்பட்டது. கற்க கசடற அமைப்பின் சார்பில் நடைபெற்ற இந்த நிகழ்விற்கு மருத்துவ அலுவலர் டாக்டர் உமாதேவி தலைமை தாங்கினார். மருத்துவர் சித்ரா வரவேற்றார். கற்க கசடற அமைப்பு தலைவர் டாக்டர் இரா.பாஸ்கரன், கௌரவத் தலைவர் மலர் சாதிக் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளர்களாக, மூத்த மருத்துவர்கள் எஸ்.குமார், கே.பஷீர் அகமது பங்குபெற்று செவிலியர்களின் தியாக மனப்பான்மையும், அவர்களின் பங்களிப்பு குறித்தும் சிறப்புரை ஆற்றினர். தலைமை செவிலியர்கள் ராஜேஸ்வரி மற்றும் சித்திரை செல்வி ஆகியோர் கௌரவிக்கப்பட்டனர். இந்நிகழ்வில் செவிலியர்கள் தின உறுதிமொழி ஏற்கப்பட்டது. செவிலியர்கள் அனைவருக்கும் நினைவு பரிசுகள் வழங்கப்பட்டது.‌ தற்காலிக செவிலியர் பணியாளர்களை நிரந்தர பணியில் அமர்த்த வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டது.செயலாளர் மனோஜ் குமார் நிகழ்வை தொகுத்து வழங்கினார். இறுதியில் செவிலியர் மேகனா நன்றி கூறினார்.