காவல் நிலையத்தில் காதல் ஜோடி தஞ்சம். திண்டுக்கல் மே 14 திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே உள்ள அய்யலூர் கலர் பட்டி பகுதியைச் சேர்ந்த ஹரிபிரசாத் வயது 30 இவர் தனியார் பால் கம்பெனியில் ஊழியராக பணியாற்றி வருகிறார் இந்நிலையில் வடமதுரை தென்னம்பட்டி பகுதியைச் சேர்ந்த சோபியா வயது 21 என்ற பெண்ணை கடந்த ஒரு ஆண்டு காலமாக காதலித்து வந்துள்ளார் பெண் கேட்டு தர மறுத்ததாக தெரியவந்தது இருவரும் காதலித்து வந்த நிலையில் வீட்டை விட்டு வெளியேறி அய்யலூரில் உள்ள கோவிலில் திருமணம் செய்து கொண்டனர் பின்னர் பெண் வீட்டார் பிரச்சினை செய்வார்கள் என கருதி வடமதுரை காவல் நிலையத்தில் காதலர்கள் மனக்கோளத்தில் தஞ்சம் அடைந்தனர் வடமதுரை போலீசார் இருதரப்பையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி இருவரும் மேஜர் என்பதால் அவர்கள் விருப்பப்படி வாழ அறிவுரை கூறி யாரும் அவர்களை தொந்தரவு செய்யக்கூடாது என மணமகன் வீட்டாருடன் அனுப்பி வைத்தனர். இதனால் சிறிது நேரம் காவல் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

More Stories
மக்களை ஏமாற்றும் மகத்தான பட்ஜெட்டில்புதுச்சேரி வளர்ச்சிக்கான நிதி எங்கே.?.முதல்வர் ரங்கசாமிக்குஆர்.எல். வெங்கட்ராமன் கேள்வி.?.
கோவையில் மாற்றுத்திறனாளிகளுக்கான கடன் மேளா
வந்தவாசி அரசு மருத்துவமனையில் நோயாளிகள் நல சங்க கூட்டம்..!