June 6, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

மணப்பாறை சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் நாளை திறப்பு விழா

அமைச்சர் எஸ் ரமேஷ் திறந்து வைக்கிறார்

திருச்சி மாவட்டம் மணப்பாறை சட்டமன்ற தொகுதியில் தமிழக வெற்றி கழகம் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ரா கதிரவன் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்

கடந்த மாதம் சட்டமன்ற உறுப்பினராக சென்னை தலைமைச் செயலகத்தில் எம்எல்ஏவாக பதவியேற்று மணப்பாறை சட்டமன்ற தொகுதியில் பல்வேறு ஆய்வுப் பணிகளை மேற்கொண்டு வந்தார்

இந்நிலையில் மணப்பாறை சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் புதிதாக புனரமைக்கப்பட்டு அதன் திறப்பு விழாவாக இன்று காலை 7.00 மணிக்கு தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் எஸ் ரமேஷ் சட்டமன்ற அலுவலகத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைக்க உள்ளார்

இதற்கான ஏற்பாடுகளை மணப்பாறை தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகள் நகரச் செயலாளர்கள் திருப்பதி அழகர் மற்றும் நிர்வாகிகள் திருநாவுக்கரசு மாயவன் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் அப்துல் சுபான்
மாவட்ட இணைச் செயலாளர் தினேஷ் நகர இணைச்செயலாளர் அம்ஜத் கான் ஒன்றிய செயலாளர்கள் மணப்பாறை தெற்கு ஒன்றியம் எம் பி எம் பாண்டியன் மருங்காபுரி ஒன்றிய செயலாளர்கள் வெள்ளைச்சாமி சேகர் வையம்பட்டி ஒன்றிய செயலாளர் பார்த்திபன் மற்றும் தமிழக வெற்றி கழக நிர்வாகிகள் ஏற்பாடு செய்து வருகின்றனர்