June 6, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

தமிழக வெற்றிகழகத்தில் இருந்து விலகி 25க்கும் மேற்பட்டோர்அ.தி.மு.க.வில் இணைத்துக் கொண்டனர்..

திருப்பூர்: ஜூன் -05

தமிழக வெற்றி கழகத்தின் ஆட்சி என்பது மூன்று கால் ஆட்சியாக தான் உள்ளது நான்காவது காலாக திமுகவின் காலை தான் பிடித்து ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறார்கள் திருப்பூரில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசாமி பேட்டி.

திருப்பூரில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் புறநகர் மாவட்ட கழகத்திற்குட்பட்ட முத்தனம் பாளையம் மற்றும் வீரபாண்டி பகுதி கழக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் புறநகர் மாவட்ட செயலாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சிவசாமி தலைமையில் நடைபெற்றது இந்த நிகழ்ச்சியில் தமிழாக வெற்றிகழகத்தில் இருந்து விலகி 25க்கும் மேற்பட்டோர் நிர்வாகி அய்யனார் தலைமையில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் தங்களை இணைத்துக் கொண்டனர் தமிழக வெற்றி கழகத்திலிருந்து விலகி அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைத்துக் கொண்டவர்களுக்கு புறநகர் மாவட்ட செயலாளர் சிவசாமி மற்றும் கழக நிர்வாகிகள் பொன்னாடை அணிவித்து வரவேற்பு கொடுத்தனர் அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய சிவசாமி தமிழக முதல்வர் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு திருச்சியில் நடைபெற்ற நன்றி அறிவிப்பு கூட்டத்தில் பாரம்பரியமிக்க அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை மிகவும் கொச்சையான வார்த்தைகளால் பேசியதை வன்மையாக கண்டிப்பதாகவும் தற்பொழுது நடைபெற்றுக் கொண்டிருக்க கூடிய ஆட்சி என்பது மூன்று கால் மட்டுமே தமிழக வெற்றிகழ்த்தத்தின் கால்களாக உள்ளது என்றும் மற்றொரு கால் திராவிட முன்னேற்றக் கழகத்தின் காலாக உள்ளது என்றும் நாங்கள் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்க கூடிய ஆட்சியை ஒட்டுக்கால் ஆட்சி என்றும் மூன்று கால் ஆட்சி என்றும் விமர்சனம் செய்தால் ஏற்றுக்கொள்வார்களா பாரம்பரியமிக்க கட்சியை தவறுதலாக பேசுவது கண்டனத்துக்குரியது என்றும் கடந்த அண்ணா திராவிட முன்னேற்ற கழக ஆட்சியின் போது முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அம்மையார் கொடநாட்டில் இருக்கும் பொழுது மண்டியிட்டது விஜய் என்றும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சட்டமன்ற உறுப்பினர்களை கொள்ளை புறத்தில் அழைத்துக் கொண்டு பேசும்பொழுது தீர்ந்து போன சக்தி என்பது தெரியவில்லையா என்றும் சட்டமன்றத்தில் உடனுக்குடன் எதிர்க்கட்சிகளின் கேள்விகளுக்கு இதே விஜய் பதிலளிப்பாரா என்றும் சட்டமன்றத்தில் எதிர்க்கட்சிகள் கேட்ட கேள்விகளுக்கு சட்டமன்றத்தில் பதிலளிக்காமல் வீட்டிற்கு சென்று பதில் கூறியவர் விஜய் என்றும் திருச்சியில் நடைபெற்ற கூட்டத்தில் திரைப்பட சூட்டிங் இல் நடிப்பது போன்று நடந்து கொண்டார் விஜய் என்றும் தமிழக முதல்வராக நடந்து கொள்ளவில்லை என்றும் இதில் வரக்கூடிய உள்ளாட்சித் தேர்தல்களில் அனைத்து விதமான தேர்தல்களிலும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் வெற்றி பெறும் என்றும் திமுகவின் ஒட்டுக்காலில் உட்கார்ந்து இருக்கக்கூடிய ஆட்சி கூடிய விரைவில் அகற்றப்படும் என்றும் கூறினார் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் வீரபாண்டி கிழக்கு பகுதி செயலாளர் ராம் பிரபு. முத்துணம்பாளையம் பகுதி செயலாளர் மோகன்ராஜ் மாநில இலக்கிய அணி இணை செயலாளர் பண்ணையார் பழனிச்சாமி மற்றும் மாவட்ட நிர்வாகிகள் பகுதி கழக நிர்வாகிகள் வட்டக் கழக நிர்வாகிகள் அதிமுக தொண்டர்கள் பெருந்திரளாக பங்கேற்றனர்….