June 6, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

ந்தவாசி‌ பகுதி பெருமாள் கோவில்களில் சொர்க்க வாசல் திறப்பு வைபவம்..!

வந்தவாசி, டிச 31:

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி ஸ்ரீ ரங்கநாதப் பெருமாள் கோவிலில் நேற்று வைகுண்ட ஏகாதசி முன்னிட்டு சொர்க்க வாசல் திறப்பு வைபவம் நடைபெற்றது. முன்னதாக மூல மூர்த்திகள் மற்றும் உற்சவ மூர்த்திகளுக்கு பால், தயிர், சந்தனம், இளநீர் உள்ளிட்ட வாசனை திரவியங்கள் கொண்டு விசேஷ திருமஞ்சனம் நடந்தேறியது.
வந்தவாசி அடுத்த தென்னாங்கூர் ஸ்ரீ பாண்டுரங்கன் ருக்மாயி திருக்கோயிலில் சொர்க்க வாசல் திறப்பு வைபவம் நடைபெற்றது. மேலும் மூல மூர்த்திகள் ஆதிசேஷன் மீது பள்ளி கொண்ட கோலத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.
வந்தவாசி ஸ்ரீ கோதண்டராமர் திருக்கோயிலில் சிறப்பு பூஜைகள் மற்றும் திருப்பாவை பாடல்கள் பாடப்பட்டது.
வந்தவாசி அடுத்த நல்லூர் ஸ்ரீ சுந்தரவரதராஜப் பெருமாள் கோவிலில் நடைபெற்ற சொர்க்க வாசல் திறப்பு விழாவில் அர்ச்சகர் ராஜன் ஸ்வாமிகள் மேற்பார்வையில் தீர்த்த பிரசாதங்கள் வழங்கப்பட்டது.
வந்தவாசி பெரியகாலனி பகுதி கலியுக வரத சீனிவாச பெருமாள் கோவிலில் மூல மூர்த்திகளுக்கு விசேஷ திருமஞ்சனம் நடந்தேறியது.
வந்தவாசி அடுத்த தெள்ளார் ஸ்ரீ ஆதி நாராயண பெருமாள் கோவிலில் சொர்க்க வாசல் திறப்பு வைபவம் நடைபெற்று சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். பங்கேற்ற அனைவருக்கும் தீர்த்த பிரசாதங்கள் வழங்கப்பட்டது.