July 28, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

கோவை

கோவை மாவட்டம் சங்கனூர் அருகே கண்ணப்பநகரில் உள்ள, ஸ்ரீ கருப்பராயன் திருக்கோவிலில், 1161ம் ஆண்டு, குரும்ப நாயனாரின் குரு பூஜை விழா கோலாகலமாக நடைபெற்றது.

ஆண்டவனிடத்தில் இடையறாத அன்பும், அடியார்களுடைய உறவில் ஆர்வமும் உடைய பெரியவர் என்றழைக்கபடுபவர் குரும்ப நாயனார். முந்தைய கால கட்டத்தில், சோழ நாட்டின் தலைநகரான மிழலை எனும் பகுதியில் வாழ்ந்தவர் குரும்ப நாயனார். இதன் காரணமாகவே இவரை பெருமிழலை குரும்ப நாயனார் என்று இச்சமூகம் அழைத்து கொண்டாடி வருகின்றது. இறைவன் திருவருளே இறவாத பெருஞ்செல்வம் என்ற, மெய்யுணர்வு வரம் பெற்றவராக திகழ்ந்தவர் குரும்ப நாயனார். இறைவனுடைய பக்தியை காட்டிலும், அடியாரின் தொண்டு, பக்தி எய்தற்கரிய சித்திகளை பெறும் என்பதற்க்கு சான்றாக வாழ்ந்தவர் குரும்ப நாயனார். இத்தகைய பெரியவரின் தொண்டை போற்றும் வகையில், 1161ம் ஆண்டு குருபூஜை விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. கோவை மாவட்டம் சங்கனூர் அடுத்த கண்ணப்ப நகரில் அமைந்துள்ள ஸ்ரீ கருப்பராயன் திருக்கோவில் வளாகத்தில் நடைபெற்ற இந்த குருபூஜை விழாவினை, கோவை மாவட்ட பெருமிழலை குரும்ப நாயனார் ஆன்மீக பேரவையினர் முன்னெடுத்து வழிநடத்தினர். குருபூஜை விழா நிகழ்ச்சியில், சீர் வளர சீர், குருமகா சன்னிதானம், அருள்மிகு ஓதிமலை சிவனேச அடிகளார் கலந்து கொண்டு, அருளுரை வழங்கினார். கண்ணப்பநகர் கருப்பராயன் திருக்கோவில் பூசாரி சின்னச்சாமி அருள் தலைமை தாங்கி, குருபூஜையினை வழி நடத்தினார். இங்கு, அலங்கரீத்து வைக்க பட்டிருந்த குரும்ப நாயனாரின் திரு உருவ படத்திற்க்கு, யாக வேள்விகள் நடைபெற்று, அவரது மலரடி பாதத்தில் மலர் தூவி மரியாதை செய்தபடி குருபூஜை விழா சீறும் சிறப்புமாக நடைபெற்றது. இதில் திறலான பக்தர்கள் கலந்து கொண்டு அவரது மலரடி பாதத்தில், மலர்கள் தூவியும், அவரது, பாடல்களை பாடியும் குருபூஜை விழாவில் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியில் கோவை மாவட்ட பெருமிழலை குரும்ப நாயனார் ஆன்மீக பேரவை அமைப்பின் மாவட்ட தலைவர் ஆறுச்சாமி, பொது செயலாளர் தென்றல் நாகராஜ், புறநகர் மாவட்ட செயலாளர் குணசேகரன், மாவட்ட பொருளாளர் தேவராஜ், துணை பொதுச்செயலாளர்கள், புகழேந்தி, மற்றும் ராஜாராம், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.