சேலத்தில் புகழேந்தி சரமாரி கேள்வி – நயன்தாராவையும் பாவாடையும் கேட்பதுதான் தேர்தல் அறிக்கையா.
சேலம்:நயன்தாராவையும் பாவாடையும் கேட்பதுதான் தேர்தல் அறிக்கையா இதற்கு ஐயா அப்துல் கலாம் பெயரை பயன்படுத்துவதா முதல்வரையும் துணை முதல்வரையும் செத்துப் போய் இருக்க வேண்டும் என்று சொல்லுவது தான் அண்ணா திமுக கொள்கையா என புரட்சி அண்ணா திமுக நிறுவனரும் முதன்மைச் செயலாளருமான புகழேந்தி சேலத்தில் கேள்வி எழுப்பி உள்ளார்.
சேலத்தில் புரட்சி அண்ணா திராவிட முன்னேற்ற கழக நிறுவனரும் முதன்மை செயலாளருமான புகழேந்தி செய்தியாளர்களை சந்தித்தார்.அவர் பேசுகையில், “மற்ற கூட்டணிகள் குறித்து இன்று சேலம் போஸ் மைதானத்தில் அன்புமணி பேசுகையில், விடுதலை சிறுத்தைகள் கட்சி, தேமுதிக குறித்து விமர்சனம் செய்கிறார். இதற்கு முன்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை அன்புமணி கடுமையாக விமர்சனம் செய்தார். தற்போது அன்புமணியை கூட்டணியில் வைத்துள்ளார். மேலும் கடுமையாக எடப்பாடி பழனிச்சாமி குறித்து விமர்சனம் செய்தவர் டிடிவி தினகரன், அவரும் கூட்டணியில் உள்ளார்.
திமுக 20 தொகுதிகள் தான் வரும் என்று எடப்பாடி பழனிச்சாமி கூறுகிறார்; ஆனால் அதிமுக 20 தொகுதிகள் வெற்றி பெறுமா என்று பாருங்கள்.. மதுரை தாண்டினால் ஒரு தொகுதி கூட வெற்றி பெறமுடியாது.மேலும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகிய இருவர் குறித்து தரம் தாழ்ந்து பேசிக் கொண்டிருக்கிறார்.
பாஜகவுடன் கூட்டணி சேர்ந்த கட்சிகளுக்கு மக்கள் வாக்களிக்கமாட்டார்கள். எதிர்க்கட்சித் தலைவராக வரமாட்டார். இந்த தேர்தலுடன் எடப்பாடி பழனிச்சாமிக்கு இதுதான் இறுதித் தேர்தல். பாஜகவை மக்கள் எதிரியாக பார்க்கிறார்கள். தேர்தலில் தோல்வி பயத்தின் வெளிப்பாடு தான்; எடப்பாடி பழனிச்சாமி அனைவரையும் கடுமையாக விமர்சனம் செய்கிறார்.
பழனிசாமி உடன் தேர்தலில் கூட்டணி வைப்பதை விட தூக்கில் தொங்கலாம் என்று சொன்ன தினகரனும், பழனிசாமியை டயர் வெற்றி என்றும் கவுன்சிலர் பதவிக்குகூட அருகதை இல்லாதவர் நிதி நிலையை பற்றி இவருக்கெல்லாம் என்ன தெரியும் என்று கேட்ட அன்புமணி ராமதாஸ் அவர்களும் கூட்டணி வைத்து இருக்கிறார்கள்..
நான் உயர்நீதிமன்றத்தில் வழக்கு போட்ட பின்னால் பேசுவதில் தடுமாறுகிறார்.. அது அவருக்கு சாதகமாக இருப்பதாக அவரது தொலைக்காட்சி மூலம் பொய் செய்தியை பரப்புகிறார் . கேவலமான வார்த்தைகளை பயன்படுத்து வது மக்கள் ரசிக்கவில்லை.. வலிமையான கூட்டணியுடன் இந்தியா கூட்டணி தமிழகத்தில் முதல்வர் மு க ஸ்டாலின் தலைமையில் அமைந்திருப்பதால் மாபெரும் வெற்றி பெறும்.
தமிழக முழுவதும் பிரச்சாரம் செய்து வந்ததால், இதனை என்னால் உணர முடிகிறது.. அவர் ஏதோ இருப்பது போல ஒரு கட்டமைப்பு ஏற்படுத்தி ஏமாற்ற பார்க்கிறார். மக்கள் ஏமாந்து விட வேண்டாம்.. ஒரு தீய சக்தியிடம் சின்னம் இருக்கிறது.. அந்த சின்னத்திற்கு வாக்களிக்க மாட்டார்கள்”இவ்வாறு புகழேந்தி கூறினார்.

More Stories
கண்டன அறிக்கை
புதுச்சேரியில் பாஜக ஆட்சி வந்ததற்குகாங்கிரஸ் கட்சிக்கு பாராட்டு விழா நடத்த வேண்டும்திமுக அமைப்பாளர் சிவா காட்டம்
ஏழை மக்கள் கழகம் நிறுவனர் தலைவரை தேசிய உழைப்பாளர் முன்னேற்ற கழக நிறுவனர் தலைவர் நேறில் சந்திப்பு!