June 6, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

மொடக்குறிச்சி தொகுதியில் தொடர்ந்து பிடிபடும் கணக்கில் வராத பணம்..

அதிமுக– பாஜக கட்சியினர் கலக்கம்..

ஈரோடு. ஏப்ரல். 23

ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி சட்டமன்ற தொகுதியில் கடந்த இரண்டு நாட்களாக தொடர்ந்து பறக்கும் படையினரால் கட்டு கட்டாக பணம் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது. இதற்கு தொடர்புடையதாக சொல்லப்படும் அதிமுக மற்றும் பாஜக கட்சியினர் மத்தியில் கலக்கம் ஏற்பட்டுள்ளது.

தமிழ்நாடு சட்டமன்ற பொது தேர்தல் இன்று நடைபெற உள்ளது. நிலையில் நேற்று முன்தினம் மாலை 6 மணியுடன் தேர்தல் பிரச்சாரம் முடிந்தது.

தேர்தல் பிரச்சாரத்தை முடித்த கையோடு அரசியல் கட்சிகள் வாக்காளர்களை வளைக்கும் வேளையில், வாக்குகளை விலைக்கு வாங்கும் வேலையில் தீவிரமாக இறங்கியுள்ளனர்.

முக்கிய அரசியல் கட்சிகள் என்று சொல்லப்படும் சில கட்சிகள் வைட்டமின் பாவை தொகுதியில் கோடி ரூபாய் இறக்கி உள்ளன.

இந்த நிலையில் ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி சட்டமன்ற தொகுதியில் முக்கிய கட்சிகள் வாக்காளர்களுக்கு பண விநியோகம் செய்து வந்தனர். தொடர்ந்து தேர்தல் பறக்கும் படையினர் கண்காணித்து வந்த நிலையிலும், அவர்களுக்கு கண்ணாமூச்சி காட்டிவிட்டு இரு முக்கிய கட்சி தரப்பினரும் தாராளமாக பணம் விநியோகம் செய்யும் வேலையில் சிறப்பாக ஈடுபட்டு வந்தனர்.

இந்த நிலையில் மொடக்குறிச்சி தொகுதியில் பாஜக சார்பில் வாக்காளர்களுக்கு பணம் வினியோகம் செய்ய டி என். 33. ஜி. 1009 என்ற எண் கொண்ட சொகுசு காரில் கொண்டுவரப்பட்ட 90 லட்சம் ரூபாயை தேர்தல் பறக்கும் படையினர் மடக்கிப் பிடித்தனர். இது குறித்து காரில் வந்தவர்களிடம் விசாரித்த போது அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பேசியதோடு அங்கிருந்து நழுவி செல்ல முயன்றனர்.

பணத்தையும் காரையும் பறிமுதல் செய்த பறக்கும் படையினர் தேர்தல் அதிகாரிகளிடம் அவைகளை ஒப்படைத்தனர்.

இது குறித்து ஈரோடு ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று முன்தினம் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பின்போது இந்த சம்பவம் குறித்து கேள்வி எழுப்பப்பட்ட நிலையில், அதற்கு பதில் அளித்த ஆட்சியர் கந்தசாமி சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும், முதல் செய்யப்பட்ட பணம் அரசு கருவூலத்தில் ஒப்படைக்கப்படும் என்று தெரிவித்திருந்தார்.

பாஜகவினர் வாக்காளர்களுக்கு விநியோகம் செய்ய வைத்திருந்த பணம் 90 லட்சம் பிடிபட்ட சம்பவம் மொடக்குறிச்சி தொகுதி முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் தேர்தல் பிரச்சாரம் முடிந்த கையோடு வாக்காளர்களுக்கு பாஜக தரப்பினர் பணம் பட்டுவாடா செய்ய தொடங்கினர்.

அதன்படி
கொடுமுடி ஒன்றிய அதிமுக செயலாளர் அம்மன் கோயில் செல்வராஜ் என்பவரின் பர்னிச்சர் கடையில் வைத்து பணத்தை எண்ணிக்கொண்டிருந்த போது, ரகசிய தகவலின் பெயரில் அங்கு அதிரடியாக வந்த தேர்தல் பறக்கும் படையினர் அதிமுக ஒன்றிய செயலாளர் செல்வராஜ் வசமிருந்த சுமார் 13 லட்சத்து 50 ஆயிரம் பணத்தை பறிமுதல் செய்தனர்.

அதுபோக பல்வேறு இடங்களில் பாஜகவினர் வாக்காளர்களுக்கு விநியோகம் செய்ய வைத்திருந்த சிறு சிறு தொகைகள் பிடிபட்டதாகவும் தொகுதியில் தகவல் பரவி.

இதன்படி பார்த்தால் தொடர்ந்து பாஜக வாக்காளர்களுக்கு வழங்கப்பட வைத்திருந்த பணம் தொடர்ந்து பிடிப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

இந்த கோடிக்கணக்கான ரூபாய் பணம் பிடிப்பட்டதால் மொடக்குறிச்சி தொகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.