திருப்பூர்: ஜூன் -15
திருப்பூரில் லட்சிய ஜனநாயகக் கட்சியின் புதிய நிர்வாகிகள் கலந்தாய்வுக் கூட்டம் யுனிவர்சல் திரையரங்கு அருகே உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
கட்சியின் நிறுவனத் தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் வீடியோ கால் மூலம் தொண்டர்கள் மத்தியில் உரையாற்றி புதிய நிர்வாகிகளுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து உரையாற்றினார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த நெல்லை ஜீவா, கட்சி தொடங்கப்பட்ட சில நாட்களிலேயே எந்தவித விளம்பரமும் இன்றி இணையதளம் மூலமாக மட்டும் சுமார் 4 லட்சம் இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள் உறுப்பினர்களாக இணைந்துள்ளதாக தெரிவித்தார்.
மேலும், புதுச்சேரியை சிங்கப்பூருக்கு இணையான மாநிலமாக மாற்றும் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், வரும் உள்ளாட்சித் தேர்தலில் கட்சியின் கட்டமைப்பை பலப்படுத்தி அனைத்து பகுதிகளிலும் போட்டியிடத் திட்டமிட்டுள்ளதாகவும் கூறினார்.
தொடர்ந்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், சவுக்கு சங்கர் முன்வைத்த குற்றச்சாட்டுகளை முற்றிலுமாக மறுத்தார். சவுக்கு சங்கர் கூறிய குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்யானவை என்றும், கட்சியுடன் எந்தவித பணப் பரிவர்த்தனை அல்லது மிரட்டல் சம்பவங்களும் தொடர்புபடுத்தப்பட முடியாது என்றும் தெரிவித்தார்.
இந்தக் கூட்டத்தில் மாநில பொதுச்செயலாளர் நெல்லை ஜீவா, மாநில நிர்வாகி டாக்டர் பூபதி, கண்ணன், தமிழழகு, குமரேசன், விஜய் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் மற்றும் 200-க்கும் மேற்பட்ட கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

More Stories
புதுவை :
பொருளாதார மந்தநிலையால் 10 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு
ஊத்தங்கரை தொகுதி மத்தூர் ஊராட்சியில் is தவெக எம்.எல்.ஏ இளையராஜா நன்றிப் பயணம்: பொதுமக்களிடம் குறைகளைக் கேட்டு அறிந்து தீர்வு காண உறுதி!