பாரதிய ஜனதா மாநில தலைவர் வி.பி. ராமலிங்கம் தகவல்
புதுச்சேரி, ஜூன் 13:
புதுச்சேரியில் பாரதிய ஜனதா கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் மாநில தலைவர் வி.பி. ராமலிங்கம் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார்.
அவர் கூறியதாவது:
இந்திரா-ராஜீவ் சாலை 100 அடி சாலை மேம்பாட்டுத் திட்டத்திற்கு ரூ.4.36 கோடி நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. புதுச்சேரி நகரில் நிலவும் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் பல்வேறு சாலை மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மேலும், மாநிலத்தில் புதிய தொழில் முதலீடுகளை ஈர்க்க அரசு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் மூலம் ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் சூழல் உருவாகியுள்ளது.
காரைக்காலில் ரூ.491 கோடி மதிப்பிலான தொழிற்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் 11,226 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 2025ஆம் ஆண்டில் ரூ.919.51 கோடி மதிப்பிலான 678 தொழில் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளதாகவும், இதன் மூலம் 77,508 பேருக்கு ரூ.352.30 கோடி மதிப்பிலான முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
மேலும், 10,635 விவசாயிகளுக்கு ரூ.36.89 கோடி நிதி உதவி வழங்கப்பட்டுள்ளதாகவும், இதில் 19வது தவணையாக 2,963 விவசாயிகளுக்கு ரூ.30 ஆயிரம் வரை பயிர் காப்பீட்டு நிதி வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
அதேபோல், 9,600க்கும் மேற்பட்டோருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளதாகவும், 5,000க்கும் மேற்பட்ட அரசு பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
புதுச்சேரிக்கு 75 மெகா சூரிய மின்சார திட்டம் அமைக்கப்பட உள்ளதாகவும், இதன் மூலம் மாநிலத்தின் மின் தேவையை பூர்த்தி செய்வதோடு வேலைவாய்ப்புகளும் அதிகரிக்கும் என்றார்.
பின்னர் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த வி.பி. ராமலிங்கம், புதுச்சேரியின் வளர்ச்சிக்காக மத்திய அரசு தொடர்ந்து ஆதரவு வழங்கி வருவதாக தெரிவித்தார்.
இந்நிகழ்வில் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் நிருபர்கள் கலந்து கொண்டனர்.

More Stories
ஊத்தங்கரை தொகுதி மத்தூர் ஊராட்சியில் is தவெக எம்.எல்.ஏ இளையராஜா நன்றிப் பயணம்: பொதுமக்களிடம் குறைகளைக் கேட்டு அறிந்து தீர்வு காண உறுதி!
புதுச்சேரி அரசியல் நிலவரம் குறித்தும் நடைபெற இருக்கின்ற தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தல் பற்றியும் மாண்புமிகு தமிழக அமைச்சரும்தமிழக வெற்றிக்கழக பொதுச் செயலாளருமான புஸ்ஸி ஆனந்த் அவர்களை….நேயம் மக்கள் கழகதலைவர் G.நேரு(எ)குப்புசாமி MLA அவர்களும்தமிழக வெற்றி கழக புதுச்சேரி பொறுப்பாளர்களானசுவாமிநாதன் ex MLA அவர்கள்,ஆசானா ex MLA அவர்கள்,தனவேல் ex MLA அவர்கள் சந்தித்து ஆலோசனை மேற்கொண்டனர்.
புதுச்சேரி முதலியார்பேட்டை தொகுதியில் சாலை, வடிகால் அமைக்கும் பணிகள் தொடக்கம் ரூ.24.70 லட்சம் மதிப்பில் திட்டம் – எம்.எல்.ஏ. ஜான் குமார் பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார்!