June 15, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

பெண்களுக்கான புற்றுநோய் விழிப்புணர்வு கருத்தரங்கு மற்றும் ரத்ததான முகாம்:-தேனி.ஜூன்.15-தேனி மாவட்டம் உத்தமபாளையத்தில் பெண்களுக்கான புற்றுநோய் விழிப்புணர்வு கருத்தரங்கம் மற்றும் ரத்ததான முகாம் நடைபெற்றது. இந்த கருத்தரங்கு மற்றும் ரத்ததான முகாமினை தேனி ரூரல் அப்ளிப்ட்மென்ட் சோசியல் டிரஸ்ட் ஏற்பாடு செய்திருந்தது.அல்-அஜ்ஹர் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி தாளாளர் நைனார் முஹம்மது முன்னிலை வகித்தார்.பெரியகுளம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை புற்றுநோய் சிறப்பு மருத்துவர் பாரதி விழிப்புணர்வு உரையாற்றினார்.நன்செய் ஒருங்கிணைப்பாளர் செல்வக்குமார் நோக்க உரை குறித்து விளக்கினார்.நிகழ்ச்சிக்கு வருகை புரிந்த அனைவரையும் டி.ஒய்.எப்.ஐ தேனி மாவட்ட தலைவர் விக்னேஸ்வரன் வரவேற்றார்.நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பு பணிகளை அனைவரும் நலம் நாடுவோம் அறக்கட்டளை டாக்டர்.பீர் ஜீ மேற்கொண்டார்.தேனி ரூரல் அப்ளிப்ட்மென்ட் சோசியல் டிரஸ்ட் தலைவர் யாசர் அராபத், செயலாளர் அப்துல்லாஹ், செயற்குழு உறுப்பினர் ஷேக்கமர்தீன் உட்பட முக்கிய பிரமுகர்கள் பொதுமக்கள்,மகளிர் ஏராளமானார் கலந்து கொண்டு பயனடைந்தனர்.நிகழ்ச்சிக்கு வந்த அனைவருக்கும் அனைவரும் நலம் நாடுவோம் அறக்கட்டளையை சேர்ந்த இளம்பிறை நவாஸ்கான் நன்றி கூறினார்.தேனி ரூரல் அப்ளிப்ட்மென்ட் சோசியல் ட்ரஸ்ட் நடத்திய நிகழ்ச்சிக்கு தேனி மாவட்ட இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், அனைவர் நலம் நாடுவோம் அறக்கட்டளை,நன்செய் தன்னார்வ அமைப்பு நிர்வாகிகள் உறுப்பினர்கள் உறுதுணையாக செயல்பட்டனர்.உத்தமபாளையம் சுற்றுப்புற பகுதிகளில் இருந்து ஏராளமானோர் கலந்து கொண்டு பயனடைந்தனர்.