மத்தூர்:
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை சட்டமன்றத் தொகுதியில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, தமிழக வெற்றிக் கழகத்தின் சட்டமன்ற உறுப்பினர் இளையராஜா, மத்தூர் ஊராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் பொதுமக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவிக்கும் நிகழ்வில் ஈடுபட்டார்.
இந்நிகழ்விற்கு மத்தூர் ஒன்றியச் செயலாளர் விக்னேஷ், சிவா மற்றும் திருமூர்த்தி ஆகியோர் தலைமை வகித்தனர். மத்தூர் ஒன்றிய இணைச் செயலாளர் இப்ராஹிம் வரவேற்றுப் பேசினார். மாவட்ட இணைச் செயலாளர் தாமோதரன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் சுகுமார், சந்தோஷ்குமார், புதியதாக இணைந்த நிர்வாகி கணேசகுமார், மாவட்ட மகளிர் அணி முருகம்மாள் (எ) பிரியா, சத்யா, ஒன்றிய மகளிர் நிர்வாகிகள் நிவேதா மற்றும் கிளைச் செயலாளர்கள் உள்ளிட்ட பலர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்வின் தொடக்கமாக, மத்தூர் பேருந்து நிலையத்தில் அமைந்துள்ள தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, எம்.ஜி.ஆர் மற்றும் ராஜீவ்காந்தி ஆகியோரின் திருவுருவச் சிலைகளுக்கு எம்.எல்.ஏ. இளையராஜா மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து பேருந்து நிலையத்தில் பூத் ஏஜெண்டாக சிறப்பாக செயல்பட்ட முகவர்களுக்கு சால்வை அணிவித்து மரியாதை செலுத்தி நன்றி தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து அம்பேத்கர் நகர், கீழ்வீதி, முக்ககவுண்டனூர், மத்தூர்பதி மற்றும் எம்.ஜி.ஆர் நகர் உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்களைச் சந்தித்து அவர் நன்றி கூறினார். அப்போது பொதுமக்கள் தங்கள் பகுதிகளில் உள்ள அடிப்படைப் பிரச்சினைகள் குறித்து கோரிக்கை மனுக்களை அவரிடம் வழங்கினர். மனுக்களைப் பெற்றுக்கொண்ட எம்.எல்.ஏ., சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் ஆய்வு மேற்கொண்டு குறைகளுக்கு உடனடியாகத் தீர்வு காணப்படும் என உறுதியளித்தார்.
மத்தூர் பேருந்து நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியின் போது, அப்பகுதியில் உள்ள அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் கிராமப்புறங்களுக்குப் பேருந்துகள் குறித்த நேரத்தில் இயக்கப்படுவதில்லை என்று புகார் தெரிவித்தனர். இதைக் கேட்ட எம்.எல்.ஏ. உடனடியாக போக்குவரத்துத்துறை அதிகாரிகளிடம் பேசி பேருந்து வசதிகளை மேம்படுத்த நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.
மேலும் மத்தூர்பதி அருகே உள்ள எம்.ஜி.ஆர் நகரில் தெருவிளக்குகள் எரியாமல் இருள் சூழ்ந்திருப்பதை நேரில் கண்ட அவர், உடனடியாக மின்சாரத்துறை அதிகாரியைத் தொடர்புகொண்டு மழையினால் பழுதடைந்த மின்விளக்குகள் அனைத்தையும் உடனடியாகச் சரிசெய்ய உத்தரவிட்டார். மக்கள் பிரச்சினைகளைத் துரிதமாக கவனித்த எம்.எல்.ஏ-வின் இந்தச் செயல்பாட்டை பொதுமக்கள் வெகுவாகப் பாராட்டினர்.
பொதுமக்களிடையே உரையாற்றிய எம்.எல்.ஏ. இளையராஜா, “கடந்த தேர்தலில் தமிழகம் முழுவதும் மக்கள் எங்கள் மீது நம்பிக்கை வைத்து மாண்புமிகு தமிழக முதல்வர் தளபதி விஜய் அண்ணாவின் முகமாக எங்களைப் பார்த்து வாக்களித்துள்ளனர். இந்த ஐந்து ஆண்டுகளும் மக்கள் பணியாற்றவே நான் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளேன். பொதுமக்கள் என்னை தாராளமாக நேரில் அல்லது தொலைபேசி வாயிலாகத் தொடர்பு கொண்டு குறைகளை தெரிவிக்கலாம். மேலும் வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலிலும் தமிழக வெற்றிக் கழக வேட்பாளர்களை விஜய் அண்ணாவின் பிரதிநிதிகளாக கருதி வெற்றிபெறச் செய்ய வேண்டும்; அப்போதுதான் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் நிரந்தரத் தீர்வு காண முடியும்” என்று கேட்டுக்கொண்டார்.
இந்நிகழ்வின் போது மாற்றுக்கட்சியினர் பலர் தானாக முன்வந்து எம்.எல்.ஏ. முன்னிலையில் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்து கொண்டனர். அவர்களுக்கு எம்.எல்.ஏ. கட்சித் துண்டு அணிவித்து வரவேற்றார்.
இந்நிகழ்ச்சிக்கான சிறப்பான ஏற்பாடுகளை கட்சி நிர்வாகிகள் வழக்கறிஞர் மகேந்திரன், ஊத்தங்கரை சட்டமன்ற தொகுதி உறுப்பினர் சேர்க்கை இணைச்செயலாளர் திருமால், மத்தூர் கிளைச் செயலாளர் ரின்சன், வழக்கறிஞர் மசூத் அஹமத், வழக்கறிஞர் சையது ஏசான், மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி இணை செயலாளர் சக்தி, ஒன்றிய செயற்குழு உறுப்பினர் விக்னேஷ், முகனூர் கிளைச் செயலாளர் நவநீதன் ஷாகுல் ஷாகுல் சுரேந்தர் ஷகீல் அஸ்கர் கோகுல் பூவரசன் கார்த்திக் கீர்த்தனா அனுஷ்கா மற்றும் பலர் செய்திருந்தனர். இறுதி நிகழ்வாக மத்தூர் ஒன்றிய இளைஞரணி நிர்வாகி ஹரிஹரன் நன்றி கூற, கூட்டம் நிறைவடைந்தது. இந்த நன்றி தெரிவிக்கும் நிகழ்வில் கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் திரளாகக் கலந்துகொண்டனர்.
செய்தியாளர் முபாரக் 8428723357



More Stories
பொருளாதார மந்தநிலையால் 10 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு
புதுச்சேரி அரசியல் நிலவரம் குறித்தும் நடைபெற இருக்கின்ற தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தல் பற்றியும் மாண்புமிகு தமிழக அமைச்சரும்தமிழக வெற்றிக்கழக பொதுச் செயலாளருமான புஸ்ஸி ஆனந்த் அவர்களை….நேயம் மக்கள் கழகதலைவர் G.நேரு(எ)குப்புசாமி MLA அவர்களும்தமிழக வெற்றி கழக புதுச்சேரி பொறுப்பாளர்களானசுவாமிநாதன் ex MLA அவர்கள்,ஆசானா ex MLA அவர்கள்,தனவேல் ex MLA அவர்கள் சந்தித்து ஆலோசனை மேற்கொண்டனர்.
புதுச்சேரி முதலியார்பேட்டை தொகுதியில் சாலை, வடிகால் அமைக்கும் பணிகள் தொடக்கம் ரூ.24.70 லட்சம் மதிப்பில் திட்டம் – எம்.எல்.ஏ. ஜான் குமார் பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார்!