புதுவை வெங்கட்டா நகர் துணை மின் நிலையத்தில் எம்.எல்.ஏ. ஜோஸ் சார்லஸ் மார்டின் ஆய்வு
புதுவை வெங்கட்டா நகர் பகுதியில் அமைந்துள்ள துணை மின் நிலையத்தில் லட்சிய ஜனநாயகக் கட்சி தலைவரும், காமராஜ் நகர் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான ஜோஸ் சார்லஸ் மார்டின் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது மின் விநியோகம், மின் கட்டணம் உள்ளிட்ட விவரங்கள் குறித்து மின்துறை அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். குறிப்பாக கிருஷ்ணா நகர், கவிக்குயில் நகர் மற்றும் ரெயின்போ நகர் பகுதிகளில் நிலவும் மின் அழுத்த ஏற்றத் தாழ்வுகள் (Fluctuations) குறித்து பொதுமக்கள் சார்பில் வைக்கப்பட்ட கோரிக்கைகள் குறித்தும் கேட்டறிந்தார்.
இதுகுறித்து உதவி மின் பொறியாளர் திலகராஜ் விளக்கமளித்தபோது, அப்பகுதிகளில் மின்மாற்றிகள் (Transformers) பற்றாக்குறை நிலவுவதாக தெரிவித்தார். இதையடுத்து தேவையான நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ளுமாறு எம்.எல்.ஏ. ஜோஸ் சார்லஸ் மார்டின் வலியுறுத்தினார்.
இந்த ஆய்வின் போது முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ரிச்சர்ட் ஜான்குமார், லட்சிய ஜனநாயக கட்சி பொதுச் செயலாளர் வழக்கறிஞர் பிரபாகரன், காமராஜ் நகர் தொகுதி தலைவர் கோகுல் கண்ணன், ரெயின்போ நகர் பொறுப்பாளர் சுரேஷ், உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

More Stories
குடிநீர் மற்றும் சுகாதாரம் குறித்து ஆய்வு கூட்டம்!!
உதவித்தொகை வழங்குதல் மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சி!!
“விக்சித் பாரத் மற்றும் சிறந்த புதுச்சேரி உருவாக்கத்தில் இளைஞர்களின் பங்கு” என்ற தலைப்பில் இளைஞர் தலைவர்களுக்கான கலந்துரையாடல் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.