வந்தவாசி, ஜூன் 16:
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி வட்ட சட்ட பணிகள் குழு சார்பில் முதியோர்களுக்கு எதிரான கொடுஞ்செயல் எதிர்ப்பு தின விழிப்புணர்வு நிகழ்ச்சி பிருதூர் புனித வளனார் முதியோர் இல்லத்தில் நடைபெற்றது. காப்பக நிர்வாகி ரெக்சிலின் மைக்கேல் வரவேற்றார்.
சிறப்பு அழைப்பாளராக , வந்தவாசி வட்ட சட்டப் பணிகள் குழுவின் தலைவரும், சார்பு நீதிபதியுமான சரண்யா பங்கேற்று சிறப்புரை ஆற்றினார். முதியவர்களுக்கு எதிரான கொடுஞ் செயல்களின் சட்டங்கள் பற்றியும், முதியோர்களுக்கான சலுகைகள் பற்றியும் கூறிய பிறகு அவர்களின் குறைகளை கேட்டறிந்தார். மேலும் இந்த நிகழ்ச்சியில் மூத்த வழக்கறிஞர் இரா.மணி, கற்க கசடற கல்வி சேவைகள் அமைப்பு தலைவர் டாக்டர் பாஸ்கரன், கௌரவத் தலைவர் மலர் சாதிக், தினேஷ் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். காப்பக நிர்வாகி பிலோமினாள் நன்றி கூறினார். இந்நிகழ்ச்சியை வட்ட சட்ட பணிகள் குழு துணை தன்னார்வலர் அரவிந்தன் ஏற்பாடு செய்திருந்தார்.

More Stories
மக்களை ஏமாற்றும் மகத்தான பட்ஜெட்டில்புதுச்சேரி வளர்ச்சிக்கான நிதி எங்கே.?.முதல்வர் ரங்கசாமிக்குஆர்.எல். வெங்கட்ராமன் கேள்வி.?.
கோவையில் மாற்றுத்திறனாளிகளுக்கான கடன் மேளா
வந்தவாசி அரசு மருத்துவமனையில் நோயாளிகள் நல சங்க கூட்டம்..!