கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட சுமார் 8 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான குட்கா புகையிலை பொருட்களைக் கடத்தி வந்த நபரை போலீசார் கைது செய்தனர்.
ஓசூர் நகர காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அசோக் பில்லர் ஜங்ஷன் ரோடு பகுதியில், போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த சந்தேகத்திற்கிடமான சரக்கு வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர்.
அந்த சோதனையில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்கள் மூட்டை மூட்டையாக இருப்பது கண்டறியப்பட்டது. இவை வெளி மாநிலத்திலிருந்து கடத்தி வரப்பட்டது தெரியவந்தது. இதன் மொத்த மதிப்பு ரூ. 8,20,000/- ஆகும்.
இதனைத் தொடர்ந்து, புகையிலை பொருட்களைக் கடத்தி வந்த நபரை போலீசார் கைது செய்தனர். கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட வாகனமும், குட்கா பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டன. இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், சம்பந்தப்பட்ட நபரை நீதிமன்றக் காவலுக்கு உட்படுத்தி சிறையில் அடைத்தனர்.
செய்தியாளர் முபாரக் 8428723357

More Stories
சேலம்,11/06/2026.
திருப்பூர்.
சேலம்,08/06/2026.