July 28, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

மணப்பாறை போலீசார் அதிரடியால் சூதாட்ட கும்பல் ஓட்டம் மூன்று பேர் கைது.

மணப்பாறை ஜூலை 22

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள வீரப்பூர் மகாமுனி கோவில் அருகே குமரேசன் என்பவரின் தோப்பில் உள்ள தோட்டத்தில் சூதாட்ட கும்பல் சீட்டு கட்டுகளை வைத்து விளையாடி வந்த நிலையில் மணப்பாறை காவல் துறையினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் சோதனையில் ஈடுபட்ட பொழுது குஜிலியம்பாறை கோவிலூர் பகுதியைச் சேர்ந்த உதயகுமார் வயது 35, மோகனூர் பார்த்திபன் வயது 28, அதே பகுதியைச் சேர்ந்த பிரகாஷ் 32 என தெரியவந்தது இவர்களிடம் இருந்து சீட்டு கட்டுகள் மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் மொபைல் போன்கள் 3 மற்றும் ரூபாய் 1,94,300) பறிமுதல் செய்யப்பட்டு வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர் இதனால் மணப்பாறை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் சூதாட்ட கும்பல் ஓட்டம் எடுத்தனர். போலீசார் குற்றச்சன்பங்கள் ஈடுபட்டால் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கவும் என்று பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்