கல்லாலிப்பட்டு முத்து மாரியம்மன் கோவிலில் கூழ் வார்த்தல் திருவிழாசெஞ்சி மே 08விழுப்புரம் மாவட்டம் செஞ்சி தாலுக்கா கல்லாலிப்பட்டு கிராமத்தில் அமைந்துள்ள மாரியம்மன் கோவிலில் கூழ்வார்த்தல் திருவிழா நடைபெற்றது .இதில் 03/05/2026 ஞாயிற்றுக்கிழமை காப்பு கட்டுதலுடன் தொடங்கிய திருவிழா தினமும் முத்துமாரி அம்மனுக்கு அபிஷேகம் ஆராதனை நடைபெற்றது .தொடர்ந்து செவ்வாய்க்கிழமை அதிகாலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் செய்யப்பட்டு தீபாரதனை காண்பிக்கப்பட்டதுமதியம் 12:30 மணிக்கு கிராமத்தில் உள்ள பெண் பக்தர்கள் தங்கள் வீடுகளில் இருந்து பூங்கரகத்துடன் கூழ் குடம் ஊர்வலமாக எடுத்து வந்து முத்துமாரியம்மன் கோவிலில் வைத்து படையல் வைத்தனர். இதில் அம்மனுக்கு பச்சரிசி பொங்கல்,கொழுக்கட்டை கூழ் மற்றும் பழ வகைகள் படையல் வைத்து சாமி தரிசனம் செய்தனர்.தொடர்ந்து கூழ்வார்த்தல் நிகழ்ச்சி தொடங்கியது பக்தர்கள் தாங்கள் எடுத்து வந்த கூழை அனைவருக்கும் பகிர்ந்து கொடுத்து மகிழ்ந்தனர்.இரவு 8 மணிக்கு வானவேடிக்கையுடன் உற்சவர் முத்துமாரியம்மன் விநாயகர் அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் அமர வைத்து ஊர்வலம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்

More Stories
கோவை
புதுவை முத்தியால்பேட்டை பெரியபாளையத்தம்மன் தேவஸ்தான 106-வது ஆண்டு ஆடித்திருவிழா: இன்று நான்காம் நாள் நிகழ்ச்சி!
திருவண்ணாமலை திருவாசக தெய்வீக மாநாடு: புதுவையில் பத்திரிகையாளர் சந்திப்பு