தமிழ்நாட்டிலுள்ள மாநகராட்சி, நகராட்சி, ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள் என மொத்தம் 41 இடங்களில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீஸாரால் ஒரே நேரத்தில் நடத்திய திடீர் சோதனையில் ரூ.58 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. காரைக்குடி மாநகராட்சி அலுவலகத்தில் சுமார் ரூ.8 லட்சம், திருப்பத்தூர் நகராட்சி அலுவலகத்தில் ரூ.5.7 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
மாநகராட்சி, நகராட்சி அலுவலகங்களை குறிவைத்து தமிழ்நாடு முழுவதும் 40 இடங்களில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீசாரால் அதிரடி சோதனை மேற்கொண்டுள்ளனர்.
தமிழ்நாடு முழுவதும் உள்ளாட்சித் துறையின் கீழ் செயல்படும் மாநகராட்சிகள், நகராட்சிகள், மாநகராட்சி மண்டல அலுவலகங்கள் என 41 இடங்களில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீசாரால் நேற்று அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
தவெக அரசு அமைந்தவுடன் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு துறையின் இயக்குனரகத்தின் தலைவராக அருண், ஐபிஎஸ்., நியமிக்கப்பட்டார். அதன் பிறகு தொடர்ச்சியாக தமிழ்நாடு முழுவதும் 40-க்கும் மேற்பட்ட இடங்களில் சார் பதிவாளர்கள் அலுவலகங்கள் வட்டார போக்குவரத்து அலுவலகம் உள்ளடக்கிய அலுவலகங்களில் அதிரடி சோதனை நடத்தி முக்கிய ஆவணங்கள் மற்றும் கணக்கில் உள்ள பணத்தை பறிமுதல் செய்தனர்.
மேலும் தமிழ்நாட்டில் அதிக பண பரிவர்த்தனை நடைபெறும் துறைகள், மக்கள் சேவைகள் அதிகம் உள்ள துறைகள், ஆகிய அலுவலகங்களில் தொடர்ச்சியாக லஞ்சக்கையூட்டு வாங்குவதாக புகார்கள் எழுந்துள்ளன. மேலும் கடந்த காலங்களில் இதேபோன்று பண்டிகை நேரங்களில் பல்வேறு அரசு அலுவலகங்களில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீஸாரால் சோதனை நடத்துவது வழக்கம்.
தற்போது தொடர்ச்சியாக புகார்களின் அடிப்படையில் மக்கள் சேவைகள் அதிகம் உள்ள துறைகளில் நடைபெறும் முறைகேடுகள் தொடர்பாக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு காவல் துறையினரால் சோதனை நடத்தி வருகின்றனர். அந்த வகையில் தான் தமிழ்நாடு முழுவதும் 41 மாநகராட்சி, நகராட்சி மாநகராட்சி மண்டல அலுவலகங்களில் சோதனையில் ஈடுபட்டனர்.
சென்னையை மாநகராட்சி மண்டல அலுவலகங்களிலும் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீசாரால் அதிரடி சோதனை நடத்தினர். அதேபோல் தூத்துக்குடி, நெல்லை, தாம்பரம், புதுக்கோட்டை மாநகராட்சி அலுவலகங்களிலும் சோதனை நடத்தினர். நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு, திருப்பத்தூர், மயிலாடுதுறை நகராட்சி அலுவலகங்களிலும் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டது.
தமிழ்நாடு முழுவதும் செயல்பட்டு வரும் மாநகராட்சி, நகராட்சி அலுவலகங்களில் லஞ்சம் பெறப்படுவதாக வந்த புகாரின் அடிப்படையில் இந்த சோதனை நடத்தப்படுவதாக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு துறை வட்டாரங்கள் தெரிவித்தன. சோதனை நடந்த அனைத்து மண்டல அலுவலக வாயிற்கதவுகள் மூடப்பட்டு ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீஸாரால் சோதனை பணியில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், 41 இடங்களில் நடத்திய திடீர் சோதனைகளில் ரூ.57.98 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காரைக்குடி மாநகராட்சி அலுவலகத்தில் சுமார் ரூ.8 லட்சம், திருப்பத்தூர் நகராட்சி அலுவலகத்தில் ரூ.5.7 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் மாநகராட்சி, நகராட்சி, ஊராட்சி மன்ற அலுவலகங்களில் நடந்த ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீசாரால் நடத்தப்பட்ட திடீர் சோதனையில் கணக்கில் காட்டப்படாத ரொக்கம் ரூ.31,27,110 கைப்பற்றப்பட்டது. மேலும், சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் GPay பரிவர்த்தனைகள் ரூ.26,70,990 கண்டறியப்பட்டது என லஞ்ச ஒழிப்புத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.

More Stories
ஈரோடு மாநகராட்சியில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை..