*புதுச்சேரி தமிழ் சங்கம் அரங்கில் பிரைன்பாக்ஸ் லேர்னிங் ஹப் நிறுவனத்தின் இரண்டாம் ஆண்டு நிறைவு விழா நடைபெற்றது!**புதுச்சேரி, ஜூலை 20:* புதுச்சேரி தமிழ் சங்கம் அரங்கில், *பிரைன்பாக்ஸ் லேர்னிங் ஹப் (Brainbox Learning Hub)*நிறுவனத்தின்*இரண்டாம் ஆண்டு நிறைவு விழா* நடைபெற்றது.இந்நிகழ்ச்சியில் *Brainbreakers Chennai* நிறுவனத்தின் நிறுவனர் அம்பிகா விஸ்வேஸ்வரன் (Ambhiga Viswesvaran) மற்றும் *SV Vidyalaya* நிறுவனத்தின் நிறுவனர் அனுராதா (Anuratha) ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டு நிகழ்ச்சியைச் சிறப்பித்தனர். பிரைன்பாக்ஸ் லேர்னிங் ஹப் நிறுவனத்தின் நிறுவனர் பாக்கியலட்சுமி இந்நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கினார்.முன்னதாக புதுச்சேரியில் பிரெயின் பிரேக்கர்ஸ் எடுடெக் சார்பில் மாண்டிசோரி ஆசிரியர் பயிற்சி மற்றும் அதன் அவசியம் குறித்த ஒரு நாள் விழிப்புணர்வு நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மாண்டிசோரி கல்வியின் முக்கியத்துவம், சிறு குழந்தைகளின் மூளை வளர்ச்சியில் அதன் பங்கு, ஆசிரியர்களுக்கான தொழில் வாய்ப்புகள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.


விழாவில் பேசிய நிறுவனத்தின் நிறுவனர் பாக்கியலட்சுமி, ‘ரைட் பிரைன் எஜுகேஷன்’ (Right Brain Education) பயிற்சியின் முக்கியத்துவம் குறித்தும், குழந்தைகளின் நினைவாற்றல், கவனத்திறன், படைப்பாற்றல் மற்றும் தன்னம்பிக்கையை மேம்படுத்துவதில் அதன் பங்கு குறித்தும் பெற்றோர்களுக்கு விரிவாக எடுத்துரைத்தார்.இவ்விழாவை முன்னிட்டு பிரைன்பாக்ஸ் லேர்னிங் ஹப் சார்பில் நடைபெற்ற ஓவியப் போட்டியில் 70-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் ஆர்வமுடன் பங்கேற்று தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. மாணவர்களுக்காக 3 மணி நேர “Mid Brain Activation” சிறப்புப் பயிற்சி முகாம் நடத்தப்பட்டு, மூளைத் திறன் மேம்பாடு மற்றும் கற்றல் திறனை வளர்க்கும் பல்வேறு பயிற்சிகள் வழங்கப்பட்டன. பிரைன்பாக்ஸ் லேர்னிங் ஹப் அமைப்பில் பயிலும் 50-க்கும் மேற்பட்ட மாணவர்கள், கண்களைக் கட்டிக்கொண்டு ஓவியம் வரைவது, கூறப்படும் வார்த்தைகளை வேகமாக எழுதுவது, கேரம் விளையாடுவது, சிலம்பம் சுற்றுவது, யோகா உள்ளிட்ட பல்வேறு தனித்திறமைகளை நேரடியாக நிகழ்த்திக் காட்டி பார்வையாளர்களின் பாராட்டைப் பெற்றனர்.இதுவரை பிரைன்பாக்ஸ் லேர்னிங் ஹப் அமைப்பில் பயிற்சி பெற்று சிறப்பாக முன்னேறிய 50-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு, அவர்களின் சாதனைகளைப் பாராட்டும் விதமாகப் பட்டமளிப்பு விழா முறையில் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.ஒரே நாளில் பெண்களுக்கான மாண்ட சரி கல்வி முறை பயிற்சி விழிப்புணர்வு நிகழ்ச்சியும், குழந்தைகளுக்கான பட்டமளிப்பு விழாவும் சிறப்பாக நடைபெற்ற இந்த நிகழ்வு, புதுச்சேரி மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்துகொண்ட இந்நிகழ்ச்சி மிகுந்த உற்சாகத்துடன் நிறைவடைந்தது.

More Stories
உள்ளாட்சித் துறையில் ஒரே நேரத்தில் 41 இடங்களில் விஜிலென்ஸ் போலீஸாரால் நடத்திய ரெய்டில்.. ரூ.58 லட்சம் சிக்கியது!
ஈரோடு மாநகராட்சியில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை..