புதுச்சேரி, ஜூலை 4:
புதுச்சேரி சோலைநகர் மற்றும் குறிச்சிகுப்பம் அரசு தொடக்கப் பள்ளிகளில், மாணவர்களுக்கான இலவச வங்கி கணக்கு தொடங்கும் சிறப்பு முகாம் நேற்று நடைபெற்றது.
அரசாங்கத்திடமிருந்து மாணவர்களுக்குக் கிடைக்க வேண்டிய கல்வி உதவித்தொகை மற்றும் இதர சலுகைகள், இடைத்தரகர்கள் இன்றி நேரடியாக மாணவர்களின் வங்கி கணக்கிற்குச் சென்றடைவதை உறுதி செய்யும் நோக்கில் இந்த முகாம் ஏற்பாடு செய்யப்பட்டது. பள்ளித் தலைமையாசிரியர் சீனுவாசன் மற்றும் ஆசிரியர்களின் முயற்சியால் இம்முகாம் சிறப்பாக நடைபெற்றது.
முன்னணி பொதுத்துறை வங்கியின் துணை மேலாளர் ஜெயபாலன் தலைமையிலான அதிகாரிகள் குழுவினர், நேரில் வருகை தந்து மாணவர்களின் விண்ணப்பங்களைச் சரிபார்த்து, அவர்களுக்கு ‘ஜீரோ பேலன்ஸ்’ (Zero Balance) கணக்குகளைத் தொடங்கி வைத்தனர்.
இம்முகாமின் மூலம் மொத்தம் 75 மாணவர்கள் வங்கி கணக்குகளைத் தொடங்கினர்.
மாணவர்களிடையே சிறு வயது முதலே சேமிக்கும் பழக்கத்தை ஊக்குவிப்பது குறித்தும், மத்திய அரசின் ‘சுகன்யா சம்ரிதி’ திட்டம் குறித்தும் பெற்றோருக்கு விழிப்புணர்வு அளிக்கப்பட்டது.
பள்ளித் தலைமையாசிரியர் சீனுவாசன் முன்னிலையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை நித்யானந்தினி, அன்பரசி, கிரிஜா, மர்ஷியல் அவிலா பாத்திமா, வித்யா, ஆர். ரத்னபிரியா, வசந்தபிரியா, ராஜராஜ சோழன், முருகசாமி, நர்மதா மற்றும் கஸ்தூரி உள்ளிட்ட ஆசிரியர்கள் செய்திருந்தனர். தங்களுக்கு வழங்கப்பட்ட இந்தத் துரிதமான சேவையை பாராட்டி பெற்றோர்கள் மிகுந்த மகிழ்ச்சி தெரிவித்தனர்.

More Stories
கலைஞர் முத்தமிழ் சங்கம் சார்பில் முப்பெரும் விழா..!
அப்துல் கலாம் நினைவு நாள் திருப்பூர் நுகர்வோர் நல முன்னேற்ற சங்கம் சார்பில் அனுசரிப்பு.
மறைந்த என்.ஆர். காங்கிரஸ் மூத்த தலைவர் மாரிமுத்து பிறந்தநாள்: மலரஞ்சலி, அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கல்