July 29, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

அயலகத்தில் இருந்தாலும் அறிவாலயத்தில்தான் என் மனம் இருக்கும்!” – குடும்பத்தாருடன் அயல் நாட்டிற்கு புறப்பட்டார் மு.க.ஸ்டாலின்!

தமிழ்நாட்டில் 2026 ஆம் நடப்பாண்டில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் தோல்வி, திமுக எம்எல்ஏ கைது போன்ற அரசியல் சலசலப்புகளுக்கு மத்தியில், தமிழ்நாட்டின் மாஜி முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின், மகன் உதயநிதி ஸ்டாலின் மற்றும் துணைவியார் துர்கா ஸ்டாலினுடன் வெளிநாட்டுக்கு புறப்பட்டிருக்கிறார்.

இந்த பயணமானது தமிழ்நாடு சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினின் மகன் இன்பநதியின் கல்லூரி படிப்பை முடித்து பட்டம் பெறும் நிலையில் திமுக தலைவர் மு க ஸ்டாலின் தனது குடும்பத்தாருடன் அயல் நாட்டிற்கு பயணம் மேற்கொள்வதாக தகவல் வெளியாகியுள்ளது.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது;- “அயலகத்தில் இருந்தாலும் அறிவாலயத்தில்தான் என் மனம் இருக்கும்” என மு.க.ஸ்டாலின் தனது x பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார். அவரை விமான நிலையத்தில் தொண்டர்கள் வழியனுப்பி வைத்திருக்கின்றனர்.

தனது x பக்கத்தில் அவர் பதிவிட்டிருப்பதாவது, “நாங்க இருக்கோம். மீண்டும் வருவோம்!” – இதுதான் அறிவாலயத்தில் நான் கேட்கும் உடன்பிறப்புகளின் குரல். நாள்தோறும் அறிவாலயத்திற்கு வரும் நூற்றுக்கணக்கான உடன்பிறப்புகள் புது உற்சாகத்தையும் ஊக்கத்தையும் அளிக்கின்றனர்.

உடன்பிறப்புகளின் உணர்வுகளை உள்வாங்கி, திராவிட முன்னேற்றக் கழகத்தின் அடுத்த நூறாண்டுகளுக்கான பயணத்தைத் திட்டமிடும் பணிகளைத் தொடங்கியுள்ள நிலையில், இருவாரப் பயணமாக நாளை அயலகம் செல்கிறேன். அயலகத்தில் இருந்தாலும் அறிவாலயத்தில்தான் என் மனம் இருக்கும்!” என்று கூறியிருக்கிறார்.