செஞ்சியில் ரூபாய் 13.92கோடியில்கட்டப்பட்ட செஞ்சி அரசு கலைக் கல்லூரியை காணொளி காட்சி வாயிலாக முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் திறந்து வைத்தார்-செஞ்சி தொகுதி மக்களின் 40 ஆண்டு காலகல்லூரி கனவு நிறைவேற்றியமுதலமைச்சர் மு. க. ஸ்டாலின் அவர்களுக்கு தொகுதி மக்கள் சார்பில் முன்னாள் அமைச்சர் செஞ்சி மஸ்தான் எம்.எல்.ஏ.தனது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொண்டார்.
விழுப்புரம் மாவட்டத்தில் செஞ்சி மேல்மலையனூர் தாலுகா உள்ளடங்கியுள்ளது.இந்த தாலுகாவில் உள்ள 200-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் மேல்நிலை கல்வி பயின்று உயர்கல்வி படிப்பதற்காக திண்டிவனம், விழுப்புரம், திருவண்ணாமலை ஆகிய பகுதிகளுக்கு சென்று படிக்க வேண்டிய சூழல் நிலவி வந்திருந்தது. இதனால் பெண் பிள்ளைகளின் உயர்கல்வி பாதிக்கப்பட்டிருந்தது.சுமார் 40 ஆண்டு காலமாகசெஞ்சி பகுதியில் உயர் கல்வி படிப்பதற்காக அரசு கலைக் கல்லூரி அமைக்க வேண்டும் எனகோரிக்கை அளிக்கப்பட்டது.இந்நிலையில்தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் ஸ்டாலினிடம் கடந்த சட்டமன்றத் தேர்தலின் போது செஞ்சி பகுதியில் அரசு கலைக் கல்லூரி அமைக்க வேண்டும் என முன்னாள் அமைச்சர் செஞ்சி மஸ்தான் எம்எல்ஏ கோரிக்கை வைத்திருந்தார். கோரிக்கையை ஏற்று கடந்த 2022-ல் நடைபெற்ற சட்டமன்ற கூட்டத் தொடரில் விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது அந்த வகையில் 2022 – 2023ஆம்ஆண்டுக்கான அரசு கலைக் கல்லூரியில் மாணவர் சேர்க்கையை தமிழ்நாடு அரசு அறிவித்ததையடுத்து சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் அவர்கள் காணொளி காட்சி வாயிலாக செஞ்சியில் புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியை திறந்துவைத்து மாணவர் சேர்க்கையை தொடங்கி வைத்தார்.இதையடுத்து தற்காலிகமாக செஞ்சி ராஜா தேசிங்கு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் செஞ்சி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி செயல்பட்டு வந்தது.பி.ஏ. தமிழ், ஆங்கிலம், பி.காம், பி.பி.ஏ. பி.எஸ்.சி கணிணி அறிவியியல் உள்ளிட்ட 5 பாட பிரிவுகளில் 300 மாணவ-மாணவிகள் கல்வி பயின்று வரும்
நிலையில் செஞ்சிஒன்றியம் விழுப்புரம் சாலையில் உள்ள சிட்டாம்பூண்டி ஊராட்சியில்உயர் கல்வித் துறை சார்பில் 13.92கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி கட்டிடம் கட்டுவதற்கு கடந்த 7.3.2024ஆம் தேதி முதலமைச்சர் உத்தரவிட்டிருந்ததையடுத்துஅரசு கலைக் கல்லூரி கட்டிடம் கட்டப்பட்டு அதன் திறப்பு விழா நிகழ்ச்சி இன்று சிட்டாம்பூண்டியில் உள்ள அரசு கலைக்கல்லூரியில் நடைபெற்றது.
சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து தமிழ்நாடு முதலமைச்சர் மு. க .ஸ்டாலின் அவர்கள் ரூபாய் 13.92கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய செஞ்சி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி கட்டிடத்தினை மாணவர்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். இதை அடுத்து செஞ்சி அரசு கலைக் கல்லூரியில்குத்து விளக்குஏற்றும் நிகழ்ச்சி மற்றும் புதிய கல்லூரியில் வகுப்புகள் தொடக்க விழா நிகழ்ச்சி கல்லூரியில் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் ஷேக் அப்துல் ரஹ்மான் தலைமை தாங்கினார்.செஞ்சி ஒன்றிய பெருந்தலைவர் விஜயகுமார், பேரூராட்சி மன்ற தலைவர்கள் செஞ்சி மொக்தியார் அலி மஸ்தான்,அனந்தபுரம் முருகன் ஆகியோர்முன்னிலை வகித்தனர்.செஞ்சி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர்ஸ்ரீவித்யா அனைவரையும் வரவேற்றார் .நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் செஞ்சி மஸ்தான் எம்எல்ஏ கலந்து கொண்டு புதிய செஞ்சிஅரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் குத்து விளக்கு ஏற்றி வைத்து மாணவர்களுக்கான வகுப்பறையை திறந்து வைத்துஇனிப்புகளை வழங்கினார்.
நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் செஞ்சி மஸ்தான் எம்எல்ஏ பேசுகையில்:
செஞ்சி தொகுதியில் அரசு கலை க்கல்லூரிஅமைக்க வேண்டும் என 40 ஆண்டு கோரிக்கையாக இருந்தது.இப்பகுதியில் மாணவர்களின் நலன் கருதி செஞ்சி பகுதியில் அரசு கலைக் கல்லூரி தேவை என்பது நீண்ட நாள் கோரிக்கையாக தொடர்ந்து இருந்து வந்தது.செஞ்சி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஆனவுடன் முதலமைச்சரிடம் செஞ்சிக்கு அரசு கலைக் கல்லூரி அமைக்க வேண்டும் என கோரிக்கை வைத்தவுடன்செஞ்சிக்கு புதிய அரசு கல்லூரியை வழங்கி 13 கோடியே 92 லட்சம் மதிப்பீட்டில் புதிய கலை கல்லூரி கட்டிடம் கட்டிக் கொடுத்த தமிழ்நாடு முதலமைச்சர்மு. க. ஸ்டாலின் அவர்களுக்கு செஞ்சி தொகுதி மக்கள் சார்பாகமனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொண்டார்.
நிகழ்ச்சியில்முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள்டாக்டர் மாசிலாமணி, சேது நாதன்,செந்தமிழ் செல்வன்,தமிழ்நாடு உடல் உழைப்பு நலவாரிய உறுப்பினர் செஞ்சி சிவா,மாவட்ட ஊராட்சி குழு துணை தலைவர் ஷீலா தேவி சேரன், ஒன்றிய பெருந்தலைவர் வல்லம்அமுதா ரவிக்குமார்,பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் முரளி,உதவி செயற்பொறியாளர்கள் வெங்கடேச பாபு ,ஹேமாநாதன், உதவி பொறியாளர்கள் வினோத், தங்கராஜ்,ஒன்றிய துணைச் சேர்மன்கள்ஜெயபாலன், விஜயலட்சுமி முருகன்,மாவட்ட கவுன்சிலர்கள் அரங்கஏழுமலை, அகிலா பார்த்திபன், சாந்தி சுப்பிரமணியன் ,செல்வி ராம சரவணன், பொதுக்குழு உறுப்பினர் மணிவண்ணன்,ஒன்றிய செயலாளர்கள்,நெடுஞ்செழியன்,விஜயராகவன், மொடையூர் துரை,இளம்வழுதி,மணிமாறன், மாவட்ட விவசாய அணி தலைவர் அஞ்சாஞ்சேரி கணேசன், பேரூர் செயலாளர்கள் அனந்தபுரம் சம்பத், செஞ்சி கார்த்திக்,ஒன்றிய கவுன்சிலர் பனிமலர் ராஜாராமன், ஊராட்சி மன்ற தலைவர் பச்சையப்பன்உள்ளிட்ட துறை சார்ந்த அலுவலர்கள், கல்லூரி பேராசிரியர்கள் ,கல்லூரி மாணவ மாணவிகள் பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.கல்லூரிதமிழ் துறை தலைவர் ஆனந்தி அனைவருக்கும் நன்றி கூறினார்.

More Stories
கண்டன அறிக்கை
புதுச்சேரியில் பாஜக ஆட்சி வந்ததற்குகாங்கிரஸ் கட்சிக்கு பாராட்டு விழா நடத்த வேண்டும்திமுக அமைப்பாளர் சிவா காட்டம்
ஏழை மக்கள் கழகம் நிறுவனர் தலைவரை தேசிய உழைப்பாளர் முன்னேற்ற கழக நிறுவனர் தலைவர் நேறில் சந்திப்பு!