June 6, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

பவானிசாகர் வட்டாரத்தில் உழவர் நல சேவை மையங்கள் அமைக்க பவானிசாகர் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் அழைப்பு

2025-26 ஆம் ஆண்டு வேளாண் நிதிநிலை அறிக்கையில் முதலமைச்சரின் உழவர் நல சேவை மையம் என்னும் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி வேளாண்மை, தோட்டக்கலை மற்றும் வேளாண் பொறியியல் துறையில் பட்டப்படிப்பு மற்றும் பட்டய படிப்பு முடித்த இளைஞர்களின் பட்டறிவும், தொழில்நுட்பத்திறனும், உழவர்களுக்கு உதவியாக இருக்கும் வகையில் பவானிசாகர் வட்டாரத்தில் 2 உழவர் நல சேவை மையங்கள் அமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இம்மையங்களில் உழவர்களுக்குத் தேவையான விதைகள், உரங்கள் மற்றும் வேளாண் உற்பத்தியை பெருக்க பயிர்களில் ஏற்படும் பூச்சிஇ நோய் மேலாண்மைக்குத் தேவையான ஆலோசனைகள் வழங்குவதோடு, நவீன தொழில்நுட்பங்கள் வேளாண் விலை பொருட்களை மதிப்பு கூட்டுதல் குறித்த ஆலோசனைகளும் வழங்கப்படும்.

பவானிசாகர் வட்டாரத்தில் வேளாண்மைஇ தோட்டக்கலை மற்றும் வேளாண்மை பொறியியல் பயின்ற இளைஞர்களின் திறன் உழவர்களுக்கு உதவியாக இருந்து உற்பத்தியை அதிகப்படுத்தும் நோக்கத்தில் 10 லட்சம் மதிப்பீட்டில் 2 மையங்கள் அமைக்கவும் இலக்கு பெறப்பட்டுள்ளது. மேற்படி மையங்களுக்கு 30 சதவீத மானியமாக ரூபாய் மூன்று லட்சம் வரை தொகை வழங்கப்படும்.

வேளாண்மை உழவர் நலத்துறையில் வழங்கப்படும் அனைத்து உரிமங்களும் முதலமைச்சரின் உழவர் நல சேவை மைய பயனாளிகளுக்கும் வழங்கப்படும். இத்திட்டத்தில் பயனடைய விரும்பும் 20 முதல் 45 வயதுக்கு உட்பட்ட வேளாண் பட்டப்படிப்பு மற்றும் பட்டயபடிப்பு முடித்த இளைஞர்கள் வங்கிகளில் தங்களுடைய விரிவான திட்ட அறிக்கையுடன் கடன் பெற விண்ணப்பிக்கலாம். வங்கி நடைமுறைகளைப் பின்பற்றிஇ கடன் ஒப்புதல் பெற்ற பின்புஇ மானிய உதவி பெற https://www.tnagrisnet.tn.gov.in/KaviaDP.scheme_register என்ற வலைதளத்தில் உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும்.

முதல்வரின் உழவர் நல சேவை மையங்கள் மாநில அரசு உதவியுடன் தொடங்கப்படுவதால்இ இந்த அரிய வாய்ப்பினை பவானிசாகர் வட்டாரத்தில் உள்ள வேளாண்மை, தோட்டக்கலை மற்றும் வேளாண் பொறியியல் படித்த பட்டதாரிகள் / பட்டய தாரர்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இது தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு தங்கள் பகுதி வட்டார வேளாண்மை விரிவாக்க மையங்களை தொடர்பு கொண்டு பயன்பெற கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு பவானிசாகர் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் தெரிவித்தார்.