July 30, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

தமிழக உரிமைப் போரில் வெற்றி: மத்தூரில் திமுகவினர் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாட்டம்கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர்“மு.க. ஸ்டாலின் வென்றார் – தமிழ்நாடு வென்றது” மற்றும் “வென்றோம் ஒன்றாக” என்ற முழக்கத்தோடு, ஒன்றிய அரசின் தொகுதி மறுவரையறை மசோதா முறியடிக்கப்பட்டதை முன்னிட்டு மத்தூரில் திமுகவினர் உற்சாகமாகக் கொண்டாடினர்.தமிழகத்தின் குரல்வளையை நெரிக்கும் வகையிலும், தமிழர்களின் அரசியல் உரிமைகளைப் பறிக்கும் வகையிலும் ஒன்றிய பாஜக அரசு கொண்டு வந்த ‘தொகுதி மறுவரையறை’ மசோதாவை தமிழக முதலமைச்சர் அவர்கள் கடுமையாக எதிர்த்து நின்றார். நாடாளுமன்றத்தில் இந்த மசோதா தோற்கடிக்கப்பட்டு, தமிழகத்தின் உரிமை நிலைநாட்டப்பட்டதை அடுத்து தமிழகம் முழுவதும் திமுகவினர் வெற்றிக் கொண்டாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.மத்தூர் பேருந்து நிலையத்தில் கொண்டாட்டம்கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட கழகச் செயலாளரும், பர்கூர் சட்டமன்ற உறுப்பினருமான தே. மதியழகன் அவர்களின் ஆலோசனையின்படி, மத்தூர் வடக்கு ஒன்றிய செயலாளர் குணா வசந்தரசு தலைமையில் மத்தூர் பேருந்து நிலையத்தில் சிறப்பான கொண்டாட்டங்கள் நடைபெற்றன.நிகழ்வின் போது, திரண்டிருந்த திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் வானவேடிக்கை நிகழ்த்தி, பட்டாசுகளை வெடித்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். தொடர்ந்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.இந்நிகழ்ச்சியில் கழக முன்னோடிகள், மாநில, மாவட்ட, ஒன்றிய மற்றும் கிளைக் கழக அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டு, “வென்றோம் ஒன்றாக” என முழக்கங்களை எழுப்பினர்.செய்தியாளர் முபாரக் 8428723357

புதுச்சேரி 17.4.2026 அன்று புதுச்சேரி 2024 ஆம் ஆண்டு சுயேட்சை MP வேட்ப்பாளராக போட்டியிட்ட விபி.மானிக்கம் கலை இலைக்கியத்...

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பர்கூர் தொகுதியில் தனி ஒருவராக வீதி வீதியாகச் சென்று ‘பேனா முனை’ சின்னத்திற்கு வாக்கு சேகரிப்பு!பர்கூர்:...
தேர்தல் பரப்புரையில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே என் நேரு பேச்சு. திருச்சி மாவட்டம் மணப்பாறை சட்டமன்றத் தொகுதி...
100% வாக்குப்பதிவை வலியுறுத்தி கையெழுத்து இயக்கம் ​கிருஷ்ணகிரி:கிருஷ்ணகிரி மாவட்டத்தில் எதிர்வரும் தேர்தலில் 100 சதவீத வாக்குப்பதிவை உறுதி செய்யும்...
தேர்தல் பரப்புரையில் தமிழக வெற்றிக் கழக வேட்பாளர் ரா கதிரவன் வாக்குறுதி திருச்சி மாவட்டம் மணப்பாறை சட்டமன்றத் தொகுதிக்கு...
திமுக கூட்டணியில் இருந்தும் சேலத்தில் திமுக ஆட்சியின் தவறை சுட்டிக்காட்டிய பிரேமலதா. சேலம் மாவட்டத்தில் நடந்த திமுக பொதுக்கூட்டத்தில்...