June 6, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

புதுச்சேரியில் போலி மருந்து விவகாரம் ஆளும் அரசை கண்டித்து ஜே.சி.எம் (JCM) மக்கள் மன்றம் ஆர்ப்பாட்டம்! – ஆளுநரிடம் புகார் மனு அளிப்பு​

​புதுச்சேரியில் போலி மருந்து மற்றும் மாத்திரைகள் தயாரிக்கப்படுவதையும், அதனால் பொதுமக்கள் கடுமையாகப் பாதிக்கப்படுவதையும் தடுக்கத் தவறிய ஆளும் அரசை கண்டித்து ஜே.சி.எம் (JCM) மக்கள் மன்றம் சார்பில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து, இந்த விவகாரம் தொடர்பாகத் துணைநிலை ஆளுநரிடம் மனுவும் அளிக்கப்பட்டது.

புதுச்சேரியில் போலி மருந்துகள் தாராளமாகப் புழங்குவதைக் கண்டித்தும், மக்களின் உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் இந்தச் செயலைத் தடுக்காத மாநில அரசை கண்டித்தும் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. இதற்கு ஜே.சி.எம் (JCM) மக்கள் மன்றத் தலைவர் திரு. ரீகன் தலைமை தாங்கினார். வில்லியனூர் தொகுதி தலைவர் திரு. பூக்கடை ரமேஷ் முன்னிலை வகித்தார். இதில் ஏராளமான ஜே.சி.எம் மக்கள் மன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டு, அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.

ஆர்ப்பாட்டத்தைத் தொடர்ந்து, ஜே.சி.எம் மக்கள் மன்றத் தலைவர் ரீகன் மற்றும் நிர்வாகிகள், புதுச்சேரி ஆளுநர் மாளிகைக்கு (ராஜ் நிவாஸ்) சென்றனர். அங்கு புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கைலாசநாதன் அவர்களை நேரில் சந்தித்து, போலி மருந்து விவகாரம் குறித்துப் புகார் மனுவை அளித்தனர்.
​அந்த மனுவில், “புதுச்சேரியில் பொதுமக்களின் உயிருக்கு அச்சுறுத்தலாக இருக்கும் போலி மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்,” என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.