தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை சார்பில் ஈரோடு’ மாவட்டம், மொடக்குறிச்சி, ஜெயராமபுரத்தில் சுதந்திரப் போராட்ட வீரர் மாவீரன் பொல்லான் அவர்களின் முழு திருவுருவச் சிலையுடன் கூடிய அரங்கத்தை திறந்து’ வைத்து, மாவீரன் பொல்லான் அவர்களின் வாரிசுதாரர்கள் – வரதராஜன், முருகன், வீரன்,பழனிச்சாமி, ராஜன் ஆகியோருக்கு சால்வை அணிவித்து சிறப்பு செய்தார். இவ்விழாவில்,நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என். நேரு, பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ. வேலு, வீட்டுவசதி, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் சு.முத்துசாமி,தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மருத்துவர் மா. மதிவேந்தன், மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் என். கயல்விழி செல்வராஜ், நாடாளுமன்ற உறுப்பினர்கள் அந்தியூர் செல்வராஜ, கே.இ.பிரகாஷ், மாதேஸ்வரன், சட்டமன்ற உறுப்பினர்கள் வி. செந்தில்பாலாஜி, வி.சி.சந்திரகுமார், ஏ.ஜி. வெங்கடாசலம், ஈ.ஆர். ஈஸ்வரன், ஆதிதமிழர் பேரவையின் நிறுவனத் தலைவர் அதியமான் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளின் தலைவர்கள், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை செயலாளர் வே.ராஜாராமன், செய்தி மக்கள் தொடர்புத் துறை இயக்குநர் மரு. இரா. வைத்திநாதன், ஈரோடு” மாவட்ட ஆட்சித் தலைவர் திரு. எஸ். கந்தசாமி, தூய்மைப் பணியாளர் நல வாரியத்தின் தலைவர் டாக்டர் திப்பம்பட்டி வெ.ஆறுச்சாமி, துணைத் தலைவர் கனிமொழி பத்மநாபன், மாவீரன் பொல்லான் அவர்களின் வாரிசுதாரர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
தமிழ்நாடு

More Stories
கலைஞர் முத்தமிழ் சங்கம் சார்பில் முப்பெரும் விழா..!
அப்துல் கலாம் நினைவு நாள் திருப்பூர் நுகர்வோர் நல முன்னேற்ற சங்கம் சார்பில் அனுசரிப்பு.
மறைந்த என்.ஆர். காங்கிரஸ் மூத்த தலைவர் மாரிமுத்து பிறந்தநாள்: மலரஞ்சலி, அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கல்