June 6, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

மாவட்டச் செய்திகள்

தமிழ்நாடு தையல் தொழிலாளர் ஒற்றுமை சங்கத்தின் சார்பில் காவேரிப்பட்டணத்தில் மே தின விழா மிகச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. தொழிலாளர்களின்...
நம் தலைமுறைக்கு மரபு சார்ந்த அறிவைக் கடத்தும் முயற்சியே சேலம் மரபுச்சந்தை – நிறுவனர் அரவிந்தன். தற்போது விவசாயமானது...
புதுச்சேரி: புதுவை மாநில பாட்டாளி தொழிற்சங்க பேரவையின் சார்பாக, புதுச்சேரி ராஜீவ் காந்தி அரசு மகளிர் மற்றும் குழந்தைகள்...
சங்கராபுரம் மே 2 கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அடுத்த பரமநத்தம் காட்டுக்கோட்டாய் பகுதியில் ஏராளமான விளைநிலங்கள் உள்ளன. இப்பகுதிகளில்...
திருவண்ணாமலை மே 2 திருவண்ணாமலையில் சித்தர்களும் பக்தர்களோடு இணைந்து கிரிவலம் வரும் சித்ரா பௌர்ணமியை ஒட்டி விடிய விடிய...
மனிதநேய மக்கள் கட்சியின்  தலைவர் பேராசிரியர்  மு.ஹி. ஜவாஹிருல்லா வெளியிடும் மே தின வாழ்த்து செய்தி உழைக்கும் கரங்களின் ஒற்றுமையை உணர்த்தி, உழைப்பின் பெருமையை உலகுக்கு உணர்த்திய நாள் தொழிலாளர் தினமாகிய மே தினத் திருநாள். தொழிலாளர் பெருமக்கள் அனைவருக்கும் எனது இதயங்கனிந்த மே தின நல்வாழ்த்துகளை உள்ளன்போடு தெரிவித்துக் கொள்கிறேன். எல்லாச் சூழலிலும் வேற்றுமையில் ஒற்றுமையைப் பேணி சேர்ந்து வாழும் பன்மைத்துவ சமூக அமைப்பு கொண்ட இந்தியாவை மதத்தால், சாதியால் பிளவுபடுத்தும் மதவெறி பாசிச சக்திகள் ஒன்றியத்தில் அதிகாரத்தில் இருந்து உழைக்கும் மக்களுக்குப் பாதிப்பை உண்டாக்கி வருகின்றன. வேலை உத்தரவாதம், ஊதிய உயர்வு, வைப்புநிதி உள்ளிட்ட தொழிலாளர் பாதுகாப்பு திட்டங்கள் யாவும் ஒன்றிய பா.ஜ.க. அரசால் சீர்குலைக்கப்பட்டு வருகிறது. உழைக்கும் தொழிலாளியின் வியர்வை உலரும் முன் அவருக்கான கூலியை வழங்கி விடுங்கள் என்பது நபிகளாரின் பொன்மொழி. உலகத் தொழிலாளர்கள் அனைவருக்குமான உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும். உழைப்பாளர் தினத்தில் நாட்டை முன்னேற்றப் பாதையில் தோள்கொடுத்துத் தூக்கி நிறுத்துகின்ற உழைப்பாளர்கள் அனைவருக்கும் மே தின வாழ்த்துக்களைத்...
ஓசூர் ராம்நகரில் திறந்த வெளி பகுதியில் நான்கு இடத்தில் பழைய பொருட்கள் சேமிப்பு குடோன்கள் உள்ளது இதில் உசேன்...
சங்கராபுரம் மே 1 சாத்தனூா் அணையில் இருந்து பாசனத்துக்கு திறக்கப்படும் தண்ணீரை அனைத்து ஏரிகளுக்கும் பகிா்ந்து வழங்க வலியுறுத்தி...
திருக்கோவிலூர் மே 1 கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூரில் தமிழ்க் கவிஞா் நாள் விழா நடைபெற்றது. பாவேந்தா் பாரதிதாசனின் பிறந்த...

கள்ளக்குறிச்சி : டன் கணக்கில் தேங்கி கிடக்கும் மருத்துவ கழிவுகள் – தீ வைத்து எரிக்காமல் அகற்ற கோரிக்கை. கள்ளக்குறிச்சி மே 1 கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனை வளாகத்தில் டன் கணக்கில் தேங்கி கிடக்கும் மருத்துவ கழிவுகளை தீ வைத்து எரிக்காமல் அகற்ற கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.கள்ளக்குறிச்சி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையானது நகர பகுதியில் அமைந்துள்ள கட்டிடத்தில் செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனைக்கு கள்ளக்குறிச்சி, சின்னசேலம், தியாகதுருகம், கல்வராயன்மலை மற்றும் கடலூர் மாவட்டம் சிறுபாக்கம், அடரி, வேப்பூர் உள்ளிட்ட பல்வேறு பகுதியில் இருந்து கர்ப்பிணி தாய்மார்கள் பிரசவத்திற்கு தினந்தோறும் வருகின்றனர்.தமிழகத்திலேயே கள்ளக்குறிச்சி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் தான் அதிகபடியான கர்ப்பிணி தாய்மார்களுக்கு அறுவை சிகிச்சை இல்லாமல் சுக பிரசவம் பார்க்கப்படுகிறது. இதனால் வெளிமாவட்டத்தில் உள்ள கர்ப்பிணி தாய்மார்கள் கள்ளக்குறிச்சி மருத்துவமனைக்கு வருகை அதிகரித்துள்ளது.இந்நிலையில் பிரசவத்திற்கு பயன்படுத்தக்கூடிய அறுவை சிகிச்சை கழிவுகள், ஊசி, மருத்துவ கழிவுகள், பேண்டேஜி, கைஉறை கிளவுஸ், மருத்துவ ஊழியர்கள் மற்றும் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வருகின்ற நோயாளிகள் கொண்டு வரப்படுகின்ற பிளாஸ்டிக் பொருட்கள், மருத்துவமனையில் பணியாற்றும் தூய்மை பணியாளர்கள் தினந்தோறும் சேகரிக்கின்ற மருத்துவ கழிவுகள் வெளியேற்றாமல் மருத்துவமனை வளாகத்தில் பயன்படுத்தி வந்த பிணவறை பகுதியில் தேக்கிவைக்கப்படுகிறது.இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் மருத்துவ கழிவுகளை நாள் கணக்கில் தேக்கிவைத்து இரவு நேரங்களில் அங்கு பணியாற்றும் தூய்மை பணியாளர்களை கொண்டு தீ வைத்து எரிக்கப்படுகிறது. இதனால் அந்த மருத்துவமனை வளாகத்தில் சிகிச்சை பெறும் கர்ப்பிணி தாய்மார்கள் மற்றும் பச்சிளம் குழந்தைகளுக்கு நோய் பரவும் அபாயம் இருந்து வருகிறது.மேலும் மருத்துவமனை வளாகத்தில் தேக்கிவைத்து எரிக்கப்படுகின்ற மருத்துவ கழிவுகளால் மருத்துவமனை பின்புற பகுதியில் வசிக்கின்ற குழந்தைகள் மற்றும் வயதானவர்களுக்கு மூச்சு திணறல் ஏற்படுகிறது. மேலும் பல்வேறு நோய் தொற்று பரவும் அபாயநிலை இருந்து வருகிறது.எனவே மகப்பேறு மருத்துவமனையில் அன்றாடம் பயன்படுத்தப்படுகின்ற அறுவை சிகிச்சை மருத்துவ கழிவுகளை தினந்தோறும் சேகரித்து வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.மருத்துவமனை வளாகத்தில் மலைபோல் குவித்து டன் கணக்கில் தேக்கி வைக்கப்பட்டுள்ள மருத்துவ கழிவுகளை எரிக்கப்படாமல் பொதுமக்கள் மற்றும் குழந்தைகள் நலன் கருதி முழுமையாக வெளியேற்ற மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மற்றும் மருத்துவ கல்லூரி மருத்துவமனை முதல்வர் பவானி ஆகியோர் உத்தரவிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.