நியமன சட்டமன்ற உறுப்பினர் பதவி வழங்க வேண்டும்
மூன்று நாள் தொடர் உண்ணாவிரத போராட்டம்

புதுச்சேரி மீனவம் காப்போம் அமைப்பு சார்பில் மீனவ சமூகத்தின் பிரச்சனைகளை சட்டப்பேரவையில் நேரடியாக எடுத்துரைக்க மீனவர்களுக்கு நியமன எம்எல்ஏ பதவி வழங்கிட வேண்டும், என வலியுறுத்தி மூன்று நாட்கள் தொடர் உண்ணாவிரத போராட்டம் நடத்த போவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி மீனவம் காப்போம் அமைப்பின் தலைவர் செல்வநாதன் தலைமையில் சுதேசி பஞ்சாலை அருகே உண்ணாவிரத போராட்டம் இன்று தொடங்கியது. இந்த போராட்டத்தில் புதுச்சேரியில் உள்ள 18 மீனவ கிராமங்களைச் சேர்ந்த முக்கிய பிரதிநிதிகள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினார்கள்.
தொடர்ந்து அவர்கள் கூறும் போது மீனவர்களின் வாழ்வாதாரம் கல்வி மற்றும் வேலை வாய்ப்பு கோரிக்கைகளுக்கு குரல் கொடுக்கவும், கடலோர பாதுகாப்பு மற்றும் மீனவ நலத்திட்டங்களை வலுப்படுத்தவும், சமூக நீதியை உறுதி செய்ய மீனவர்களுக்கு நியமன சட்டமன்ற உறுப்பினர் பதவி வழங்கிட வேண்டும் என வலியுறுத்தினர்.

More Stories
கலைஞர் முத்தமிழ் சங்கம் சார்பில் முப்பெரும் விழா..!
அப்துல் கலாம் நினைவு நாள் திருப்பூர் நுகர்வோர் நல முன்னேற்ற சங்கம் சார்பில் அனுசரிப்பு.
மறைந்த என்.ஆர். காங்கிரஸ் மூத்த தலைவர் மாரிமுத்து பிறந்தநாள்: மலரஞ்சலி, அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கல்