June 27, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

மத்தூர் அருகே சோகம்: திருமணத்திற்கு வந்த மூதாட்டி கிணற்றில் சடலமாக மீட்பு! போலீசார் விசாரணை

மத்தூர்:
கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் அருகே திருமண விழாவிற்கு வந்த மூதாட்டி ஒருவர், பாழடைந்த கிணற்றில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் கஸ்தூரி (63). இவர் நேற்று மத்தூர் அருகேயுள்ள தோழனூர் கிராமத்தில் நடைபெற்ற உறவினர் வீட்டு திருமண விழாவில் கலந்துகொள்வதற்காக வந்துள்ளார். இந்த நிலையில், நேற்று இரவு முதல் கஸ்தூரியைக் காணவில்லை எனத் தெரிகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த அவரது உறவினர்கள் பல இடங்களில் தேடி வந்துள்ளனர்.
இந்நிலையில், இன்று காலை திருமண வீட்டின் அருகே இருந்த பாழடைந்த கிணறு ஒன்றில் கஸ்தூரி சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார். இதுகுறித்துத் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மத்தூர் காவல் துறையினர், மூதாட்டியின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், இச்சம்பவம் குறித்து மத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மூதாட்டி நிலைதடுமாறி கிணற்றில் தவறி விழுந்தாரா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

செய்தியாளர் முபாரக் 8428723357

You may have missed