புதுச்சேரி, ஜூன் 26: புதுச்சேரியில் லாஸ்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தை முதல்வர் ரங்கசாமி திறந்து வைத்து, அமைச்சர் சிவக்கொழுந்து அவரது இருக்கையில் அமர வைத்து வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.
புதுச்சேரி லாஸ்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத் திறப்பு விழா நடைபெற்றது. இவ்விழாவில் சிறப்பு அழைப்பாளராக முதல்வர் ரங்கசாமி கலந்துகொண்டு ரிப்பன் வெட்டி, சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தைத் திறந்து வைத்து, பூஜை செய்து, முதல்வர் ரங்கசாமி அமைச்சர் சிவக்கொழுந்துவை அவரது இருக்கையில் அமர வைத்து, பொன்னாடை போற்றி வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.
மேலும் இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ், சட்டமன்ற உறுப்பினர்கள் அழகு (எ) அழகானந்தம், வையாபுரி மணிகண்டன், பாஜக மாநில தலைவர் ராமலிங்கம், என் ஆர் காங்கிரஸ் பொதுச் செயலாளர் என் எஸ் ஜே ஜெயபால், முன்னாள் அமைச்சர் லட்சுமிநாராயணன், கூட்டணி கட்சி தலைவர்கள், என். ஆர் காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்துகொண்டு அமைச்சர் சிவக்கொழுந்து மற்றும் சப்தகிரி அறக்கட்டளை பொறுப்பாளர் ரமேஷ் குமார் ஆகியோருக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்.
மேலும் இந்த விழாவில் லாஸ்பேட்டை தொகுதியைச் சேர்ந்த என் ஆர் காங்கிரஸ் நிர்வாகிகள், சப்தகிரி அறக்கட்டளை நிர்வாகிகள், மகளிர் அமைப்பினர், அரசு துறை அதிகாரிகள், கோவில் நிர்வாகிகள், இளைஞர் அமைப்பினர் மற்றும் பலர் கலந்துகொண்டு பொன்னாடை போர்த்தியும், பூங்கொத்து கொடுத்தும், நினைவு பரிசுகள் வழங்கியும் தங்கள் வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்.

More Stories
மக்களை ஏமாற்றும் மகத்தான பட்ஜெட்டில்புதுச்சேரி வளர்ச்சிக்கான நிதி எங்கே.?.முதல்வர் ரங்கசாமிக்குஆர்.எல். வெங்கட்ராமன் கேள்வி.?.
கோவையில் மாற்றுத்திறனாளிகளுக்கான கடன் மேளா
வந்தவாசி அரசு மருத்துவமனையில் நோயாளிகள் நல சங்க கூட்டம்..!