வந்தவாசி, ஜூன் 26:
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் செய்யார் மதுவிலக்கு அமலாக்க பிரிவு சார்பில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. நிகழ்விற்கு செய்யாறு மதுவிலக்கு அமலாக்க பிரிவு உதவி ஆய்வாளர் சரவணன் தலைமை தாங்கினார். வந்தவாசி தெற்கு காவல் நிலைய துணை ஆய்வாளர் விநாயகமூர்த்தி, பள்ளி தலைமை ஆசிரியர் ஞானசம்பந்தன், சமூக ஆர்வலர்கள் ஏ.ஜெ.ரூபன், மலர் சாதிக் ஆகியோர் முன்னிலை வகித்தனர். உடற்கல்வி ஆசிரியர் முத்தமிழ், உதவி ஆய்வாளர் முருகன் உள்ளிட்ட காவலர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். ஊர்வலம் பள்ளியில் தொடங்கி பஜார் வீதி வழியாக சென்று மீண்டும் பள்ளியை அடைந்தது. நிகழ்ச்சியை கேப்டன் பிரபாகரன் தொகுத்து வழங்கினார்.

More Stories
வாழ்க்கை முழு வட்டமாகச் சுழலும் ஒரு வியக்கத்தக்க தன்மையைக் கொண்டது.
*புதுச்சேரிக்கு பெருமை சேர்த்த காலாப்பட்டு அரசு பள்ளி; தேசிய அளவில் முதலிடம் பிடித்த பள்ளியின் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்களை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் செந்தில் நேரடியாக சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்
சமூகப் பொறுப்புணர்வுடன் களமிறங்கிய லூமினா டேட்டாமேடிக்ஸ்: புதுச்சேரியின் 400 ஆண்டுகள் பழமையான முழியன் குளம் சீரமைப்பு – மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் விருது வழங்கி கௌரவம்