June 26, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

சமூகப் பொறுப்புணர்வுடன் களமிறங்கிய லூமினா டேட்டாமேடிக்ஸ்: புதுச்சேரியின் 400 ஆண்டுகள் பழமையான முழியன் குளம் சீரமைப்பு – மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் விருது வழங்கி கௌரவம்

புதுச்சேரி:

புதுச்சேரி, பூரணாங்குப்பத்தில் அமைந்துள்ள 400 ஆண்டுகள் பழமையான வரலாற்றுச் சிறப்புமிக்க ‘முழியன் குளம்’, லூமினா டேட்டாமேடிக்ஸ் (Lumina Datamatics) உள்ளிட்ட நிறுவனங்களின் பெருநிறுவன சமூகப் பொறுப்புணர்வு (CSR) நிதியுதவியுடன் சீரமைக்கப்பட்டு, இன்று பொதுமக்களின் பயன்பாட்டிற்குத் திறக்கப்பட்டது.

இந்தச் சீரமைப்புப் பணிகளை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் இன்று நேரில் சென்று திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில், புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கைலாசநாதர், புதுச்சேரி முதலமைச்சர் என். ரங்கசாமி, மற்றும் பல அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

சமூக மேம்பாட்டிற்காகவும், நீர்வளத்தைப் பாதுகாப்பதற்காகவும் லூமினா டேட்டாமேடிக்ஸ் நிறுவனம் காட்டிய முன்மாதிரியான பங்களிப்பைப் பாராட்டும் விதமாக, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள், அந்நிறுவனத்தின் சார்பாக விருது வழங்கி கௌரவித்தார். இந்த விருதை நிறுவனத்தின் சார்பில் ஸ்ரீநிவாஸ் ராவ் (Srinivas Rao)– நிர்வாகத் துணைத் தலைவர், செயல்பாடுகள் (Executive Vice President, Operations)
பியூஷ் குமார் (Piyush Kumar)– துணைத் தலைவர், செயல்பாடுகள் (Vice President, Operations)
வினோத் பிலிப் (Vinod Philip)– தலைவர், சந்தைப்படுத்தல் மற்றும் தகவல் தொடர்பு (Head, Marketing and Communications) ஆகியோர் பெற்றுக் கொண்டனர். மேலும்
உலகளாவிய டிஜிட்டல் மற்றும் தொழில்நுட்பச் சேவைத் துறையில் முன்னணி நிறுவனமாகத் திகழும் லூமினா டேட்டாமேடிக்ஸ், தனது வணிகச் செயல்பாடுகளைத் தாண்டி சமூக நலனிலும் மிகுந்த அக்கறை கொண்டுள்ளது. 400 ஆண்டுகள் பழமையான குளத்தைப் புனரமைத்து, அதனை மீண்டும் உயிர்ப்பித்ததன் மூலம், சுற்றுச்சூழல் பாதுகாப்பில் இந்நிறுவனம் கொண்டுள்ள அர்ப்பணிப்பு வெளிப்பட்டுள்ளது.

விருது பெற்றதன் மூலம், சமூகப் பொறுப்புணர்வுடன் செயல்படும் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாக லூமினா டேட்டாமேடிக்ஸ் மீண்டும் ஒருமுறை தனது அடையாளத்தைப் பதிவு செய்துள்ளது. இந்தச் சிறப்பான முன்னெடுப்புக்கு அரசுத் தரப்பிலும், பொதுமக்கள் தரப்பிலும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

You may have missed