பிச்சைக்காரன் மன நிலையுடன் மக்களுக்கு சேவையாற்ற தயாராக உள்ளேன் என நாடாளும் மக்கள் கட்சி அமைப்பின் சார்பில் வேட்பு மனு தாக்கல் செய்த தங்க சண்முகசுந்தரம் தெரிவித்தார்
அரியலூர் மாவட்டம் கீழக்காவட்டாங்குறிச்சி கிராமத்தை சேர்ந்தவர் தங்க சண்முகசுந்தரம். இயற்கை ஆர்வலரும் விவசாய கூட்டமைப்பை சேர்ந்தவருமான இவர் அரியலூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட முடிவு செய்தார் இதனை ஒட்டி வைப்பு தொகையாக கட்ட வேண்டிய ரூ10,000 பணத்தை கடந்த சில வாரங்களாக பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளிடம் யாசகம் பெற்று வந்தார் இந்நிலையில் வேட்பு மனு தாக்களின் முதல் நாளான இன்று முதல் நபராக தங்க சண்முகசுந்தரம் தனது வேட்பு மனுவை அரியலூர் சட்டமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் பிரேமிடம் வழங்கினார் ஒரு ரூபாய் அப்பொழுது பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளிடம் யாசகம் பெற்ற சில்லறை காசுகள் சில்லறை நோட்டுகள் ஆகியவற்றை கொடுத்து தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார் இதில் தனது சொத்து மதிப்பாக இரண்டு வீடு மற்றும் 2 அரை ஏக்கர் வயல் ஆகியவற்றை அசையா சொத்துகளை காட்டியுள்ளார்
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தங்கசண்முக சுந்தரம் நான் வைப்பத் தொகையாக பத்தாயிரம் ரூபாயை பொதுமக்களிடம் பிச்சை எடுத்து கட்டி உள்ளதை பெருமையாக கருதுகிறேன் பிச்சைக்காரன் அடுத்த வேலை சோற்றை பற்றி எண்ண மாட்டான் அதே மனநிலையுடன் நானும் மக்களுக்காக செயல்படுவேன். தேர்தல் செலவுக்காக எனக்கு ஒரு நாளைக்கு 500 ரூபாய் எனது இருசக்கர வாகன பெட்ரோலுக்கு போதுமானது மற்றபடி எனக்கு எந்தவிதமான செலவும் இல்லை. தனி ஆளாக தான் மக்களை சந்தித்து ஓட்டு கேட்க உள்ளேன் நான் அரியலூர் சட்டமன்ற தேர்தலில் மகத்தான வெற்றி பெற்று பொதுமக்கள் மற்றும் விவசாயிகளின் கோரிக்கைகளை சட்டமன்றத்தில் எழுப்புவேன் என தன்னம்பிக்கையுடன் தெரிவித்தார்

More Stories
ஏழை மக்கள் கழகம் நிறுவனர் தலைவரை தேசிய உழைப்பாளர் முன்னேற்ற கழக நிறுவனர் தலைவர் நேறில் சந்திப்பு!
பத்திரிகைச் செய்தி04.06.2026
முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி பிறந்த நாளை முன்னிட்டு தேனி மாவட்டம் குச்சனூர் பேரூராட்சியில் சேர்மன் ரவிச்சந்திரன் தலைமையில் பொதுமக்களுக்கு இனிப்புகள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது .உடன் திமுக நிர்வாகிகள் உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டனர்.