மார்ச்-31
திருப்பூர் கணக்கம்பாளையம் பிரிவு பிள்ளையார் கோவில் வீதி பகுதியைச் சேர்ந்தவர் ஆறுமுகம் 75 இவரது மனைவி மகேஸ்வரி மற்றும் மகன் குமரேசன் உடன் வாழ்ந்து வந்தார். மகன் குமரேசன் கடந்தாண்டு உயிரிழந்த நிலையில் ஏழு வருடங்களுக்கு முன்பு ஆறுமுகம் இதய பிரச்சினைக்காக மருத்துவ செலவுக்கு எம்மாம்பூண்டியைச் சேர்ந்த பொன்னுச்சாமி என்பவர் இடம் நான்கு லட்சம் ரூபாய் கடன் பெற்றுள்ளனர். இதற்காக ஆறு ஆண்டுகளாக தொடர்ந்து வட்டி செலுத்தி வந்த நிலையில் கடந்த ஓராண்டாக மருத்துவ செலவு அதிகரித்த நிலையில் வட்டி தொகையை கொடுக்க முடியாமல் போனதாகவும் இதனால் பொன்னுச்சாமி நேரடியாக வீட்டுக்கு வந்து கடும் சொற்களால் திட்டி மன உளைச்சல் ஏற்படுத்தி வருவதாகவும் மேலும் 4 லட்சம் ரூபாய் கடனுக்கு மீட்டர் வட்டி போட்டு 22 லட்சம் ரூபாய் கேட்டு தங்களுக்கு மிரட்டல் விடுத்து வருவதால் அச்சமான சூழல் நிலவுவதாகவும் பொன்னுசாமி இடமிருந்து தங்களுக்கு பாதுகாப்பு வேண்டும் எனவும் வீட்டை விற்று அசல் தொகை 4 லட்சம் ரூபாய் கொடுக்க முன்வந்தும் அவர் அதனை வாங்காமல். தங்களை மிரட்டுவதால் மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல் துறையினர் தங்களுக்கு பாதுகாப்பு வழங்கி நீதி பெற்று தர வேண்டும் என கோரிக்கை விடுத்து பாதிக்கப்பட்ட மகேஸ்வரி மற்றும் அவரது உறவினர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்.
நான்கு லட்சம் கடனுக்கு மீட்டர் வட்டி போட்டு 22 லட்சம் கேட்டு மிரட்டும் நபரிடமிருந்து பாதுகாப்பு பாதிக்கப்பட்ட பெண் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தார்.

More Stories
கலைஞர் முத்தமிழ் சங்கம் சார்பில் முப்பெரும் விழா..!
அப்துல் கலாம் நினைவு நாள் திருப்பூர் நுகர்வோர் நல முன்னேற்ற சங்கம் சார்பில் அனுசரிப்பு.
மறைந்த என்.ஆர். காங்கிரஸ் மூத்த தலைவர் மாரிமுத்து பிறந்தநாள்: மலரஞ்சலி, அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கல்