February 27, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

மணப்பாறையில் இன்று முதல் அந்தியோதயா விரைவு ரெயில் நின்று சென்றதை அடுத்து போட்டி போட்டு கோசங்கள் எழுப்பிய காங்கிரஸ் – பாஜக,, மதிமுக. கட்சியினரால் பரபரப்பு.

நாகர்கோவிலில் இருந்து தாம்பரம் வரை இருமார்க்கத்திலும் செல்லும் அந்தியோதயா விரைவு ரெயில் இன்று முதல் (26 ம் தேதி) மணப்பாறை ரெயில் நிலையத்தில் நின்று செல்லும் என்று ரெயில்வே துறை சார்பில் அறிவிப்பு வெளியான நிலையில் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இந்நிலையில்இன்று இரவு நாகர்கோவிலில் இருந்து தாம்பரம் நோக்கி சென்ற அந்யோதயா விரைவு ரெயில் மணப்பாறை ரெயில் நிலையத்தை 9.17 மணிக்கு வந்தடைந்தது. ரெயில் வந்தடையும் நேரத்தில் ஒருபுறம் ரெயில் மணப்பாறை ரெயில் நிலையத்தில் நிற்க பாடுபட்ட திருச்சி பாராளுமன்ற உறுப்பினர் துரை வைகோவிற்கு நன்றி தெரிவித்து மதிமுகவினர் கோசங்கள் எழுப்பினர். அப்போது அங்கு வந்த கரூர் பாராளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி நடைமேடையில் காத்திருந்த நிலையில் காங்கிரஸ் கட்சியினர் ரெயில் மணப்பாறை ரெயில் நிலையத்தில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க உதவிய ஜோதிமணிக்கு நன்றி தெரிவித்து கோசங்கள் எழுப்பினர். இதையடுத்து ரெயில் நடைமேடையில் வந்த போது அங்கிருந்த பாஜகவினர் பாரத் மாத்தாக்கி ஜே என்றும், பாரத பிரதமர் நரேந்திர மோடி வாழ்க என்றும் கோசங்கள் எழுப்பினர். அப்போது அங்கு திரண்டிருந்த காங்கிரஸ் கட்சியினர் வந்தே மாதரம் வருங்கால பிரதமர் ராகுல்காந்தி வாழ்க என்று கோசங்கள் எழுப்பினர். இப்படியாக மாறி மாறி கோசங்கள் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்ட நிலையில் ரெயில் வந்து நின்றதும் பாராளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி ரெயிலில் ஏறி பைலட்டுகளுக்கு இனிப்பு வழங்கினார். அதற்கு போட்டியாக பாஜக, மற்றும் ம.தி.மு.கவினரும் ஏறி இனிப்பு வழங்கினர். சுமார் 5 நிமிடங்களுக்கு பின்பு ரெயில் புறப்பட்ட போது கட்சி நிர்வாகிகள் கையில் வைத்திருந்த சிக்னல் லைட்டை போட்டி போட்டு அடித்து காட்ட ரெயில் மெதுவாக அங்கிருந்து புறப்பட்டு சென்றது. மணப்பாறை ரெயில் நிலையத்தில் அந்தியோதயா ரெயில் நின்று சென்றதற்கு 3 கட்சி நிர்வாகிகள் போட்டி போட்டுக் கொண்டு கோசம் எழுப்பியது ரெயில் நிலையத்தை சிறிது நேரம் பரபரப்பிற்கு உள்ளாக்கியது.

Facebook
YouTube
Instagram
WhatsApp