போக்குவரத்து கழகங்களை தனியார் மயப்படுத்தாதே! மோட்டார் வாகன சட்டம் விதி 288 A ஐ திருத்தாதே! தனியார் பேருந்துகளை நிரந்தரமாக குத்தகைக்கு எடுக்கும் முடிவை கைவிடு! மின்சார பேருந்துகளை அரசே ஏற்று நடத்து! காண்ட்ராக்ட் முறையில் ஆள் எடுப்பதை கைவிடு! காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்பிடு! ஓய்வு பெற்ற தொழிலாளிக்கு பணப்பலன்களை நிலுவையின்றி வழங்கு! உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பரமக்குடி கிளை முன்பு TNSTC – AITUc காரைக்குடி மண்டலம் சார்பாக மண்டல தலைவர் வி.ரவிக்குமார் தலைமையில் மாநிலம் தழுவிய ஆர்ப்பாடம் நடைபெற்று வருகிறது. மண்டல பொதுச் செயலாளர் எம்.விஜயசுந்தரம், மத்திய சங்க து.தலைவர் பி ஆர் கோவிந்தய்யன், கிளை செயலாளர் எஸ்.சிவானந்தம், மா.ச.செயலாளர் எஸ்.சுப்பிரமணியன், ஓய்வு பெற்ற சங்க சம்மேளன பொறுப்பாளர், வை.மணவாளன், AITUC இராமநாதபுரம் மாவட்ட செயலாளர் என்.கே.ராஜன் உள்ளிட்ட பல நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
மாநிலம் தழுவிய ஆர்ப்பாடம்

More Stories
மணப்பாறையில் மனநலம் பாதித்த மூதாட்டிக்கு மனிதநேய அடிப்படையில் உதவி
காவேரிப்பட்டினம் ஒன்றிய அவைத்தலைவர் இராமமூர்த்தி மனைவியின் துக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தே.மதியழகன்
புதுச்சேரி ஆல்பா கல்லூரி மற்றும் அனுலர் டெக்னாலஜிஸ் இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க புரிந்துணர்வு ஒப்பந்தம்!