நடவடிக்கை எடுக்கக் கோரி கதறி அழும் விதவைப் பெண்..
பள்ளிபாளையம்.நவ.03
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே தனது நிலத்தை திமுக பிரமுகர் ஒருவர் ஆக்கிரமிப்பு செய்து கொண்டு தன்னிடம் அடாவடியான முறையில் தகராறு செய்து வருவதாக விதவைப் பெண் ஒருவர் கண்ணீர் மல்க காவல்துறையிடம் புகார் கொடுத்துள்ளார்.
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே உள்ள இளையாம்பாளையம் கொசப்பள்ளி காடு பகுதியை சேர்ந்தவர் கஜேந்திரன் இவரது மனைவி மகேஸ்வரி.
கஜேந்திரன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இறந்துவிட்ட நிலையில், அவருக்கு சொந்தமான இரண்டு ஏக்கர் நிலத்தில் அவரது மனைவி மகேஸ்வரி வேளாண் பணியில் ஈடுபட்டுள்ளார்.
இந்த நிலையில் மறைந்த கஜேந்திரனின் சகோதரி ஜோதிமணி மற்றும் திமுக பிரமுகரான அவரது கணவர் விஜயகுமார் ஆகிய இருவரும் சேர்ந்து, மகேஸ்வரி இடம் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளனர்.
மேலும் தனது கணவருக்கு சொந்தமான நிலத்தில் மகேஸ்வரி பயிர் நடவு பணியில் ஈடுபட்டிருந்தபோது கஜேந்திரனின் அக்கா ஜோதிமணி அவரது கணவர் திமுக பொறுப்பாளர் விஜயகுமார் மற்றும் உறவினர்கள் தனபால் , ராசம்மாள் உள்ளிட்டோர் மகேஸ்வரி இடம் நேரில் சென்று இந்த நிலத்தில் எங்களுக்கும் பங்கு உண்டு என்று கூறி தகராறு ஈடுபட்டு கடும் வாக்குவாதம் செய்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து மகேஸ்வரி வெப்படை காவல் நிலையத்தில் புகார் கொடுத்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிகிறது. தொடர்ந்து போராடிய நிலையில் ஒப்படை காவல்துறையினர் இருதரப்பினரையும் அழைத்து சமாதான பேச்சு வார்த்தை நடத்தினர்.
இருந்தபோதிலும் நான் ஆளுங்கட்சியை சேர்ந்தவன் திமுக பிரமுகர் என்று கூறி போலீசாரிடமும் விஜயகுமார் என்ற அந்த நபர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக தெரிகிறது.
மேலும் பள்ளிபாளையம் ஒன்றிய திமுக பொறுப்புக் குழு உறுப்பினராக இருந்து வரும் விஜயகுமார் என்ற அந்த நபர் மீது பல்வேறு முறைகேடுகளுக்கான குற்ற சாட்டுகளை அப்பகுதி பொதுமக்கள் முன்வைக்கின்றனர்.
சம்பந்தப்பட்ட காவல்துறையினர் பாதிக்கப்பட்டுள்ள விதவைப் பெண்ணிற்கு சட்டப்படியான நியாயம் கிடைக்க காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்போது இப்போது மக்கள் மேலும் கோரிக்கை வைத்துள்ளனர்.
இந்த சம்பவம் பள்ளிபாளையம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

More Stories
ஆர் எல் வி மக்கள் முன்னேற்றக் கழகத்தின் ஏனாம் தொகுதி நிர்வாகிகள் பட்டியல்ஆர் எல் வெங்கட்ராமன் வெளியிட்டார்.
கொங்கு மண்டலத்தில் ஹாட் டாப்பிக் – சேலம் தவெக மீட்டிங்கில் செங்கோட்டையனுக்கு அவமரியாதையா!?.
பாரதிய ஜனதா கட்சி பிரச்சார பிரிவு சேலம் பெருங்கோட்டம் நடத்தும் பேச்சாளர்கள் பயிற்சி முகாம் சேலத்தில் சிறப்பாக நடைபெற்றது.